''தமிழக அரசு உத்தர விட்டால், மருத்துவ படிப்புக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஆன்லைன் முறையில் நடத்தப்படும்,'' என, மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறினார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க, கவர்னர் தாமதம் ஏற்படுத்தினார். அதனால், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடத்துவது தாமதமானது. தற்போது, கவர்னர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனவே, ஓரிரு நாட்களில், இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை, இந்தாண்டு ஆன்லைன் வாயிலாக நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 2019- - 20ம் கல்வியாண்டிலேயே, இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறியதாவது: மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடத்துவதற்கு, அரசாணை வெளியிடப்பட்டுஉள்ளது. விண்ணப்ப வினியோகம், ஓரிரு நாளில் துவங்கும். தமிழக அரசு உத்தரவுப்படி, மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங், ஆன்லைன் அல்லது நேரடியாக நடத்தப்படும். இரண்டிற்கும் மருத்துவக் கல்வி இயக்குனரகம் தயாராக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.