எம்.டி. ஹோமியோபதி பட்டமேற்படிப்பு சேர்க்கை அறிவிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 20, 2020

Comments:0

எம்.டி. ஹோமியோபதி பட்டமேற்படிப்பு சேர்க்கை அறிவிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எம்.டி. (ஹோமியோபதி) பட்ட மேற்படிப்பு 2020-2021 கல்வியாண்டுக்கான (அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இருக்கைகளுக்கு மட்டும்) சேர்க்கை அறிவிக்கையை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
சேர்க்கை அறிவிக்கையில், 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி (மொழி சிறுபான்மையினர் சுயநிதி) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம், ஆத்தூரில் உள்ள ஓயிட் மெமோரியல் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி (மத சிறுபான்மையினர் சுயநிதி)-ல் அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இருக்கைகளுக்கு, ஹோமியோபதி மருத்துவத்திற்கான AIAPGET 2020-ல் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து, இணையவழி மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 19.10.2020 அன்று முதல் வரவேற்கப்பட்டன. விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை எங்களது அலுவலக வலைதளமான www. tnhealth.tn.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்ய மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் பெறுவதற்கான கடைசி நாட்கள் முறையே 20-11-2020 மற்றும் 23-11-2020-லிருந்து 27.11.2020 முடிய மாலை 05.00 மணி மற்றும் 30.11.2020 முடிய மாலை 05.30 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரமான வலைதள அறிவிக்கை, மேற்கண்ட எம்.டி. (ஹோமியோபதி) பட்ட மேற்படிப்பிற்கான சுயநிதி மொழி/மத சிறுபான்மையினர் மருத்துவக் கல்லூரிகளின் விவரம், தகவல் தொகுப்பேடு, விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்ப பதிவிறக்கம் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதிமுறைகள், படிப்புகளின் விவரம், கல்விக்கட்டணம் மற்றும் இதர விவரங்களுக்கு “www. tnhealth.tn.gov.in’’ என்ற வலைதளத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews