தமிழக சட்ட பல்கலையில், விதிகளுக்கு முரணாக, ஐந்து மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கியுள்ளதாக, புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, பல்கலை சார்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக சட்ட பல்கலை இணைப்பில், தமிழகம் முழுதும், 10 அரசு சட்ட கல்லுாரிகளும், இரண்டு தனியார் கல்லுாரிகளும் செயல்படுகின்றன. இவற்றில், 2,000 இடங்களில், ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
தகுதியில் விதி மீறல்
பல்கலை வளாகத்தில் சீர்மிகு சட்டப்பள்ளி தனியாக செயல்படுகிறது. அதில், 'ஹானர்ஸ்' வகை சட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் சேர, மாணவர்களிடம் அதிக போட்டி ஏற்படுவது உண்டு.பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கே, கவுன்சிலிங்கில் இடம் கிடைக்கும். மாணவர் சேர்க்கைக்கு, பி.ஏ., - பி.பி.ஏ., - எல்.எல்.பி., படிப்புக்கு, பிளஸ் 2வில் எந்த பாடப்பிரிவும் படித்திருக்கலாம். பி.சி.ஏ., எல்.எல்.பி.,க்கு, பிளஸ் 2வில் கணினி அறிவியலும், பி.காம்., - எல்.எல்.பி.,க்கு, பிளஸ் 2வில் கணக்கு பதிவியலும் படித்திருக்க வேண்டும். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில், பிளஸ் 2வில் கணிதம் படித்த சில மாணவர்கள், தங்களுக்கு அதிக மதிப்பெண்கள் இருந்தும், பி.சி.ஏ., - எல்.எல்.பி.,யில் இடம் கிடைக்கவில்லை என, புகார் அளித்துள்ளனர்.இதுகுறித்து, பல்கலை நிர்வாகம் விசாரித்த போது, தங்களை விட குறைந்த மதிப்பெண் பெற்ற, கணித பாட பிரிவினர், பி.சி.ஏ., - எல்.எல்.பி.,யில், கடந்தாண்டில் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, பல்கலை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கணினி பிரிவில் படிக்காத ஐந்து மாணவர்கள், கடந்தாண்டு, பி.சி.ஏ.,வில் சேர்க்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. விசாரணைக்கு உத்தரவு இந்த விவகாரம், பல்கலை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. பல்கலையின் சிண்டிகேட், கல்வி குழு மற்றும் இந்திய பார் கவுன்சில் நிர்ணயித்த கல்வி தகுதியை மீறி, மாணவர்களை சேர்த்தது எப்படி என்பது என, கேள்விகள் எழுந்துள்ளன.கல்வி தகுதியை பார்க்காமல் தரவரிசை பட்டியல் தயாரித்து, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது யார்; சான்றிதழ் சரிபார்த்தது யார்; இறுதியில் சான்றிதழ்கள் மற்றும் கல்வி தகுதியை ஆய்வு செய்யாமல் விட்டது எப்படி என, விசாரணை நடத்த உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், முறைகேடு ஏதும் நடந்துள்ளதா, சிபாரிசுகள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனரா என்றும் விசாரணை துவங்கியுள்ளது.ஏற்கனவே, சட்ட பல்கலையில், சில ஆண்டுகளுக்கு முன் வரை, வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு ஒதுக்கீட்டில், விதிகளை மீறி மாணவர்களை சேர்த்த புகார் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நிலுவையில் உள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.