Breaking

Friday, November 13, 2020

பொது நுாலக துறையின் புத்தக கொள்முதல் விண்ணப்பிக்க அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொது நுாலக துறையின் புத்தக கொள்முதலுக்கு, 2018, 2019ம் ஆண்டு புத்தகங்களை அனுப்புமாறு, பொது நுாலக இயக்குனர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக பொது நுாலக இயக்குனர் நாகராஜ முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக பொது நுாலக இயக்ககத்தின் கீழ் இயங்கும், நுாலகங்களுக்கு, 2018, 2019ம் ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட, தமிழ், ஆங்கிலம் புத்தகங்களை வாங்க, பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் களிடம் இருந்து, புத்தகங்கள் பரிசீலினைக்கு வரவேற்கப்படுகின்றன. அவற்றை அரசு அமைக்கும் புத்தக தேர்வுக்குழு பரிசீலித்து, தேர்வு செய்யப்படும் புத்தகங்கள் மட்டும் வாங்கப்படும். இந்த நடவடிக்கையில், 2018, 2019ம் ஆண்டு பதிப்பான தமிழ், ஆங்கில புத்தகங்கள் மட்டுமே பரிசீலினைக்கு எடுத்து கொள்ளப்படும். புத்தகங்களை அதற்கான ஏ, பி, சி என்ற, மூன்று வகை படிவங்கள் மற்றும் குறுந்தகட்டுடன், டிசம்பர், 11க்குள் பொது நுாலக இயக்குனரகம், எண், 737/௧ அண்ணா சாலை, சென்னை-02 என்ற, முகவரிக்கு அனுப்ப வேண்டும்.புத்தக பதிவு கட்டணம், சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகிய விபரங்களை, www.connemara publiclibrarychennai.com என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog