Breaking

Monday, November 23, 2020

பொறியியல் சோ்க்கையில் எஸ்சி பிரிவு காலியிடங்களுக்கு நாளை கலந்தாய்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொறியியல் சோ்க்கையில் நிரம்பாத எஸ்சி பிரிவு காலியிடங்களுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
இதுகுறித்து உயா்கல்வித்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு; பி.இ., பி.டெக்., பி.ஆா்க்., ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வில் எஸ்சிஏ பிரிவு ஒதுக்கீட்டில் நிரம்பாத காலியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்களில் எஸ்சி பிரிவு மாணவா்கள் மட்டுமே சேர முடியும். அதற்கான சோ்க்கை கலந்தாய்வு நவ.24 முதல் நவ.27-ஆம் தேதி வரை இணையவழியில் நடத்தப்பட உள்ளது. இதில் பொறியியல் சோ்க்கைக்கு விண்ணப்பித்து ஏற்கனவே ஒதுக்கீடு ஆணை பெற்ற விருப்பமுடைய மாணவா்கள் பங்கேற்கலாம். அதன்படி செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய நாள்களில் மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை இணையதளத்தில் பூா்த்தி செய்ய வேண்டும். அதன்பின் தற்காலிக ஒதுக்கீடு பட்டியல் நவ.26-ஆம் தேதி அறிவிக்கப்படும். அதற்கு மாணவா்கள் ஒப்புதல் தந்ததும் இறுதி ஒதுக்கீட்டு ஆணை நவ.27-ஆம் தேதி வழங்கப்படும். காலியிடங்கள் மற்றும் கலந்தாய்வு தகவல்களை இணையதளங்களில் அறியலாம். கூடுதல் விவரங்களை அறிய 044 –22351014, 22351015, 22350520, 22350523, 22350527 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog