மருத்துவ உள் ஒதுக்கீடு ஐகோர்ட் பாராட்டு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 03, 2020

Comments:0

மருத்துவ உள் ஒதுக்கீடு ஐகோர்ட் பாராட்டு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிட்டது, கவர்னர் இசைவளித்ததை, உயர் நீதிமன்ற மதுரை கிளை பாராட்டியது. மதுரை, திருமங்கலம் அச்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமகிருஷ்ணன், மேலக்கோட்டை மாணவர் முத்துக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம், தமிழக சட்டசபையில் செப்., 15ல் நிறைவேற்றப்பட்டது. அது, கவர்னரின் இசைவிற்காக அனுப்பி வைக்கப்பட்டது.தமிழகத்தில் சட்டத்தை, 2020 -21 கல்விஆண்டில் நடைமுறைப்படுத்த, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, குறிப்பிட்டனர். ஏற்கனவே விசாரணையின்போது, சட்ட மசோதாவிற்கு கவர்னர் இசைவு அளிப்பது, நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து, நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அக்., 29ல், அரசுத் தரப்பில் அவகாசம் கோரியதால், நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு நேற்று விசாரித்தது. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், 'சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்ட மசோதாவிற்கு கவர்னர் இசைவளித்துள்ளார். இவ்வழக்கில் மேலும் உத்தரவு எதுவும் பிறப்பிக்கத் தேவையில்லை' என்றார்.நீதிபதிகள், 'அனைவரையும் பாராட்டுகிறோம். மகிழ்ச்சி' என்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews