தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற் றும் ஆசிரியர்கள் , கல்லூரி ஆசிரியர்கள் , என்ஜினீயர்கள் , மருத் துவர்கள் உள்ளிட்டோருக்கு உயர்கல்வி தகுதிக்காக ஊக்க ஊதியம் ( அட்வான்ஸ்டு இன்கிரிமென்ட் ) வழங்கப்படுகிறது.
அதுபோல் , கணக்கு தேர்வில் தேர்ச்சி பெற்ற சார்நிலைப் பணியாளர்களும் ஊக்க ஊதியம் பெற தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில் , அரசு ஊழியர்களுக்கான உயர்கல்வி ஊக்க ஊதியத்தை ரத்து செய்து தமிழக அரசு கடந்த மார்ச் 10 - ந் தேதி அரசாணை வெளியிட்டது.
இந்த அரசாணை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் , அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் , பேராசிரியர்களுக்கும் பொருந்துமா ? என்ற குழப்பம் எழுந்தது. அதைத் தொடர்ந்து இதற்கான விளக்கத்தை அளித்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உத்தரவை ஒன்றை வெளியிட்டார்.
அதில் , அரசு ஊழியர்களுக்கு ரத்து செய்யப்பட்ட ஊக்க ஊதியம் தொடர்பான அரசாணை , ஆசிரியர்கள் , பேராசிரியர்கள் , என்ஜினீயர்கள் , மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும். கடந்த மார்ச் 10 - ந் தேதிக்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.