ஆசிரியர் பணியிடம் - கல்வி - பள்ளிகள் - அனைத்து மாவட்டங்கள் - ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் காலிப்பணியிடத்தை நிரப்பிடும் பொருட்டு - பதவி உயர்வுக்கு 01.03.2020 அன்றைய நிலையில் இறுதி பணிமூப்பு பட்டியல் வெளியிடுதல் தொடர்பாக - ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்களின் செயல்முறைகள் - நாள்.05.10.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 06, 2020

Comments:0

ஆசிரியர் பணியிடம் - கல்வி - பள்ளிகள் - அனைத்து மாவட்டங்கள் - ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் காலிப்பணியிடத்தை நிரப்பிடும் பொருட்டு - பதவி உயர்வுக்கு 01.03.2020 அன்றைய நிலையில் இறுதி பணிமூப்பு பட்டியல் வெளியிடுதல் தொடர்பாக - ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்களின் செயல்முறைகள் - நாள்.05.10.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்களின் செயல்முறைகள் சென்னை -5
- முன்னிலை : திரு.ச.முனியநாதன், இ.ஆ.ப., ந.க.எண். எ3/8819 / 2020
நாள்.05.10.2020
பொருள்
ஆசிரியர் பணியிடம் - கல்வி - பள்ளிகள் - அனைத்து மாவட்டங்கள் - ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் காலிப்பணியிடத்தை நிரப்பிடும் பொருட்டு - பதவி உயர்வுக்கு 01.03.2020 அன்றைய நிலையில் இறுதி பணிமூப்பு பட்டியல் வெளியிடுதல் தொடர்பாக.

பார்வை
1. அரசாணை (நிலை) எண். 56, ஆதிதிரவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை (ஆதிந-1) நாள். 28.01.2017.
இவ்வ லுவலக கடித ந.க.எண். எ3/8819/2020 நாள்.05.06.2020.
3. இவ்வலுவலக செயல்முறைகள் ந.க.எண்.G3/8819/2019 நாள்.19.09.2020 4. தொடர்புடைய ஆவணங்கள் ஆணை
பார்வையில் 1-ல் காணும் அரசாணையின்படி ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை நிர்வாக வசதிக்காவும், தனிப்பொறுப்புடன் கூடிய அதிகாரத்துடன் செயல்படவும் ஆதிதிராவிடர் நலத்துறையிலிருந்து பழங்குடியனர் நலத்துறை தனியே பிரிக்கப்பட்டு 01.04.2018 முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்காரணமாக ஆசிரியர்களின் பணிமூப்பினை நிர்ணயம் செய்வதிலும், காலிப்பணியிடங்களை அறுதியிடுவதிலும் நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டு தொடர்ந்து 01.03.2017, 01.03.2018, 01.03.2019 வரையில் அனைத்து ஆசிரியர்கள் நிலையிலும் பதவி உயர்வு வழங்குவதில் காலதாமதமானது.

மேலும், 25.03.2020 முதல் கொரோனா வைரஸ் பெருந்தொற்று ( COVID 19) என்பதால் அரசு அலுவலகங்கள் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்கிய நேரத்தில் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்ததால், தலைமையாசிரியர்களிடமிருந்து ஆசிரியர்களின் பணிசார்ந்த விவரங்கள் மற்றும் பணிப்பதிவேடுகளை முழுமையாக பெற்று பரிசீலனை செய்ய இயலாத நிலையில் தற்காலிகமாக இப்பணிமூப்பு பட்டியல் வரிசை எண் 1 முதல் 55 வரை இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் மூலம் 31.05.2006 வரையிலும், வரிசை எண் 56 முதல் 115 வரை இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் 2003 - 2004 ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தரவரிசை எண் (Rank) மற்றும் ஒரே ஆண்டில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களின் தரவரிசை ஒன்றாக இருக்கும் நேர்வில் பணியேற்ற நாளினை கணக்கில் கொண்டும், மேலும் தரவரிசை எண் மற்றும் பணியேற்ற நாள் ஒன்றாக இருக்கும் நேர்வில் அவர்களின் பிறந்த தேதியை அடிப்படையாகக் கருதி 31.12.2004 வரை பணியில் சேர்ந்தவர்களைக் கொண்டு இறுதி பணிமூப்பு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்பும் பொருட்டு இத்துறையில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி / பட்டதாரி | தமிழ் ஆசிரியர்கள் / நடுநிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் / பட்டதாரி காப்பாளர் / காப்பாளனி / உதவிக்கல்வி அலுவலர்கள் ஆகியோரது பணி விவரங்கள் சம்பந்தப்பபட்ட மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்கள் /தனி வட்டாட்சியர்கள் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பெறப்பட்டு பணிமூப்பு, கல்வித்தகுதி மற்றும் துறைத்தேர்வுகள் தேர்ச்சியின் அடிப்படையில் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறத் தகுதியானவர்களைத் தேர்வு செய்து இறுதி பணிமூப்பு பட்டியல் தயார் செய்து 01.03.2020 நிலையில் வெளியிட்டு ஆணையிடப்படுகிறது.

மேற்படி சம்மந்தப்பட்ட முதுகலைப்பட்டதாரி / பட்டதாரி | தமிழ் ஆசிரியர்கள் / நடுநிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் / பட்டதாரி காப்பாளர் / காப்பாளனி / உதவிக்கல்வி அலுவலர்கள் ஆகியோரது பணிசார்ந்த விவரங்கள் மற்றும் பணிப்பதிவேடுகள் முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டு இறுதி பணிமூப்பு பட்டியல் வெளியிட்டு ஆணையிடப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD FULL PROC PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews