தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 6
ந. க. எண். 34554 / «1 / இ1/ 2020 நாள்: 09.10. 2020
பொருள் :
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி -மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் – பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - 2020-2021-ஆம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயாரித்தல் அரசு உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சார்பிலான விவரங்கள் கோருதல் - சார்பு.
பார்வை:
1. அரசாணை (நிலை) எண் 528 பள்ளிக் கல்வி (ஏ1) துறை நாள் 31.12.97.
2. அரசாணை (நிலை).எண்.155 பள்ளிக் கல்வி (ஏ1) துறை நாள் 3.7.2009
2020-2021 ஆண்டுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் ஒத்தநிலை அலுவலர் பணியிடங்களுக்கான தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் 01.01.2020 நிலவரப்படி தயாரித்தல் சார்ந்து, அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில், தங்கள் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு உயர் /மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் சார்பான விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து 23.10.2020-க்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பொருள் சார்பாக கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. 1. இணைப்பில் உள்ள அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் முன்னுரிமைப் பட்டியலை தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் சுற்றுக்கு அனுப்பி, அதன் ஒப்புகையினைப் பெற்று தங்கள் அலுவலகத்தில் பராமரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
2. மேற்காணும் முன்னுரிமைப் பட்டியலில் தகுதியுள்ள தலைமையாசிரியர் எவரது பெயராவது விடுபட்டிருந்தால், உரிய ஆவணங்களுடன், முதன்மைக் கல்வி அலுவலரின் விரிவான குறிப்புரையுடன் இச்செயல்முறைகள் கிடைக்கப் பெற்ற 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
3. அரசாணை (நிலை) எண்.528, பள்ளிக் கல்வி (ஏ1) துறை நாள் 31.12.1997ல் தெரிவித்துள்ளவாறு, இணைப்பில் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களிடம் விருப்ப படிவத்தில் (Option Form) பதவி உயர்வு / பணி மாறுதலுக்கு விருப்பம் அல்லது விருப்பமின்மை விவரங்களை பெற்று, சார்ந்த தலைமையாசிரியர்களின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்து அதன் சான்றொப்பமிட்ட நகல் மற்றும் விருப்ப உரிமை படிவம் (அசல்) ஆகியவை அனுப்பப்பட வேண்டும். CLICK HERE TO DOWNLOAD DSE PROCEEDING PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.