எஸ்.ஐ., பணி தேர்வர்களுக்கு கொரோனா சான்று அவசியம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 01, 2020

Comments:0

எஸ்.ஐ., பணி தேர்வர்களுக்கு கொரோனா சான்று அவசியம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'எஸ்.ஐ. உடல் தகுதி தேர்வில் பங்கேற்பவர்கள் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என சான்று வைத்திருக்க வேண்டும்' என காவலர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக காவல் துறையில் காலியாக உள்ள எஸ்.ஐ.க்கள் பணியிடங்களுக்கு ஜனவரியில் எழுத்து தேர்வு நடந்தது.அதில் தேர்வானவர்களுக்கு உடல் தகுதி தேர்வு இன்று முதல் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடக்க உள்ளது.இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: தேர்வு கமிட்டிக்கு சென்னை மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் அமல்ராஜ் சேர்மனாகவும் வடக்கு மண்டல போக்குவரத்து இணை கமிஷனர் பாண்டியன் துணை சேர்மனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மார்பளவு உயரம் ஓட்டப்பயிற்சி கயிறு ஏறுதல் உள்பட பல்வேறு தேர்வுகள் நடக்கும்.முக்கியமாக மார்பளவு கணக்கீடு செய்யும் போலீசார் சான்றுகளை சரிபார்க்கும் அமைச்சு பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு விடக் கூடாது என உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். எனவே உடல் தகுதி தேர்வில் பங்கேற்க உள்ளவர்கள் அந்தந்த மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்து தொற்று இல்லை என சான்று பெற வேண்டும்.அதேபோல உடல் தகுதி தேர்வை நடத்தும் போலீசார் அதிகாரிகள் அமைச்சு பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று நடத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -
காவல் துறையில் காலியாக உள்ள 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஜனவரி மாதம் 12,13 ஆகிய தேதிகளில் 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வை ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் எழுதினர். அதில் 5,500 பேர் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றனர். அதைதொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று முதல் வரும் 12ம் தேதி வரை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த உடற்தகுதி தேர்வுக்கு நாள் ஒன்றுக்கு 600 பேர் வீதம் அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கான அழைப்பாணைகளும் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அழைப்பாணை அனுப்பப்பட்ட விண்ணப்பதாரர்கள் உடற்தகுதி தகுதி தேர்விற்கு கலந்து கொள்ளும் போது, கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும் என்று சீருடை பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.அதைதொடர்ந்து நேற்று காலை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உடல் தகுதி தேர்வு தொடங்கியது. அப்போது கலந்து கொள்ள வந்த அனைவருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதில் கலந்து கொண்ட நபர்களுக்கு 400 மீட்டர், 1200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அதைதொடர்ந்து நீளம் தாண்டுதல், கயிர் ஏறுதல் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற்றது. போட்டில் கலந்து ெகாண்ட அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து சான்றுடன் வந்திருந்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews