MGR கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 03, 2020

MGR கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டாக்டர் எம்.ஜி.ஆர். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கடலூர் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடலூர் டாக்டர் எம்.ஜி.ஆர். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2020-21-ம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலாண்மை மற்றும் நகை மதிப்பீடும் அதன் தொழில்நுட்பங்களும் ஆகிய 3 சான்றிதழ்களுடன் கூடிய கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான பயிற்சி விண்ணப்பங்கள் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் இணையதள முகவரியான www.tncu.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வருகிற 15-ந்தேதி மாலை 5.30 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கொரியர் மற்றும் பதிவு தபால் மூலமாக மட்டுமே டாக்டர் எம்.ஜி.ஆர். கூட்டுறவு மேலாண்மை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்த ஆண், பெண் இருபாலரும், எஸ்.எஸ்.எல்.சி. டிப்ளமோ முடித்தவர்களும் சேரலாம். பயிற்சி காலம் 9 மாதங்கள். கட்டணம் ரூ.14 ஆயிரத்து 850 ஆகும். மேலும் விபரங்களுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண் 3, கடற்கரை காலை சரவணபவ சூப்பர் மார்க்கெட் வளாகம் கடலூர் என்ற முகவரியில் உள்ள அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews