'ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான தமிழ் புலமை தேர்வு அக்டோபர் 5 முதல் நடத்தப்படும்' என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பதவிகளில் சேருவோருக்கு தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற சட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது.இதன்படி ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரிகள் முதல் அனைத்து அலுவலர்களும் பணிக்கு வந்த குறிப்பிட்ட காலத்தில் தமிழை படிக்க வேண்டும். மேலும் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த கல்வி ஆண்டுக்கான தமிழ் மொழி புலமை தேர்வு அக். 5 முதல் நடக்க உள்ளது. அதே போல் தமிழ் புலமை தேர்வுக்கான அரையாண்டு தேர்வும் நடக்க உள்ளது.இதில் ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். - ஐ.எப்.எஸ். அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்கலாம். தேர்வு எழுத விரும்புவோர் செப். 23ம் தேதிக்குள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.