அரியர் மாணவர்கள் பாஸ் விவகாரம் தொடர்பாக ஏஐசிடிஇ, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இ-மெயில் அனுப்பியதாக வந்த தகவலை வைத்து சமூகவலைதளங்களில் மீண்டும் விவாதம் எழ தொடங்கி உள்ளது. இதனால் #AICTE என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது.
கொரோனாவை காரணம் காட்டி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டது. மேலும் அரியர் வைத்த மாணவர்களுக்கும் இது பொருந்துவதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் மத்தியில் இது வரவேற்பு பெற்றாலும் கல்வியாளர்கள் மத்தியில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த முடிவுக்கு, அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக அரசு அறிவித்ததற்கு எதிராக ஏஐசிடிஇ, சென்னை அண்ணா பல்கலைகழகத்திற்கு அனுப்பிய கடிதம் ஒன்று வெளியானது. இதனால், அரியர் வைத்த மாணவர்கள் பாஸா? இல்லையா? என்ற குழப்பம் நீடித்தது. ஆனால் அந்த இ-மெயில் போலியானது என அண்ணா பல்கலை துணை வேந்தர் சூரப்பா மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் உயர்கல்வி அமைச்சர் அன்பழகனும் இதை மறுத்திருந்தார்.
இதனால் இன்று(செப்.,8) காலையில் இருந்து #AICTE என்ற ஹேஷ்டாக் சமூகவலைதளங்களில் வைரலானது. முன்பு, தமிழக முதல்வரின் அறிவிப்பை சமூகவலைதளங்களில் மாணவர்கள் கொண்டாடினர். பல ஊர்களில் பேனர், போஸ்டர் எல்லாம் அடித்து வாழ்த்தினர். ஆனால் இன்று இப்படி ஒரு தகவல் வந்ததும், அது அப்படியே நெகட்டிவ் மீம்ஸ்களாக மாறியன. இதை வைத்து சமூகவலைதளங்களில் தொடர்ந்து அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கின்றன. தேர்வுகள் வைக்க வேண்டும் என்று ஒரு புறமும், வேண்டாம் என மறுபுறமும் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. நடுநிலையாக பலர் ஆன்லைனில் தேர்வுகளை வையுங்கள் என வலியுறுத்தி வருகின்றன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups