'கவின் கலை கல்லுாரி மாணவர்களுக்கு, தவறான வரலாறு கற்பிக்கப்படக் கூடாது; பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:சென்னையில் உள்ள, அரசு கவின் கலை கல்லுாரி தான், இந்தியாவில், கவின் கலைக்காக துவக்கப்பட்ட முதல் கலைக்கல்லுாரி. ௧௮௫௦ல் துவக்கப்பட்டு, ௧௭௦ ஆண்டுகள் பழமையான இக்கல்லுாரி, உலக அளவில் புகழ்பெற்ற ஓவியர்களையும், சிற்பிகளையும் உருவாக்கியது. இப்போது, கல்லுாரிக்கான பாடத்திட்டத்தில், மூன்றாம் பருவத்திற்கான செய்முறை தேர்வில், நாட்டிய முத்திரைகள் மற்றும் நாட்டியத்தைக் காட்சிப்படுத்துதல் என்ற பாடம், வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டுள்ளது.
ஓவியத்திற்குள் நடனத்தையும், இசையையும் திணிப்பது தவறான முன்னுதாரணம். கவின் கலையுடன் எந்த தொடர்பும் இல்லாத பல்கலை துணைவேந்தர் பிரமீளா குருமூர்த்தியும், தொல்லியல் துறையின் தலைவர் பாலாஜியும், பாடத்திட்டத்தை தயாரித்தது தான் குழப்பங்களுக்கு காரணம். எனவே, பாடத்திட்டத்தில் இழைக்கப்பட்ட தவறுகளை திருத்த, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups