புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி கற்கவும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தவும், உயர் கல்வியில் பெரிய அளவில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் இந்த புதிய கல்வி கொள்கையில் வகை செய்யப்பட்டு உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு திமுக உட்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதில் இடம் பெற்றுள்ள மும்மொழி திட்டத்தை ஏற்க முடியாது என்று தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே நீடிக்கும் என்றும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தமாட்டோம் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.
CLICK HERE TO DOWNLOAD G.O PDF
இந்நிலையில் புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழு பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. 13 பேர் கொண்ட குழுவில் கல்வியாளர்கள், அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்
ஏற்கனவே தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
CLICK HERE TO DOWNLOAD G.O PDF
CLICK HERE TO DOWNLOAD G.O PDF
CLICK HERE TO DOWNLOAD G.O PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைத்து தமிழக அரசு நடவடிக்கை
13 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு
13 பேர் கொண்ட குழுவில் கல்வியாளர்கள், அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்
பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தலைமையில் குழு இயங்கும் - தமிழக அரசு