சென்னை ஐஐடியில் முதன்முத லாக ஆன்லைன் மூலம் கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது. அதில் இறுதி ஆண்டு மாணவர்கள் வீடியோ கான்பரன்சில் பங்கேற்றனர்.
சென்னை ஐஐடியில் படிக்கும் இறுதி மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ (வளாக நேர்காணல்) நடத்தப்படுவது வழக்கம். இதில், இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவ னங்கள் கலந்துகொண்டு பணியா ளர்களை தேர்வு செய்யும். இந்த ஆண்டு கரோனா தொற்று காரண மாக கேம்பஸ் இன்டர்வியூவை நடத்த முடியவில்லை. இந்நிலை யில், இந்த ஆண்டு முதல்முறை யாக கேம்பஸ் இன்டர்வியூ ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.
554 மாணவ மாணவிகள் தேர்வு
ஆக.11-ல் நடந்த இந்தத் தேர்வில் அமெரிக்காவின் ருப் ரிக்ஸ் சாப்ட்வேர் டெவலப்மென்ட், ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த ஜேன் ஸ்ட்ரீட்ஸ் குவான்டிடேட்டிவ் ரிசர்ச்சர், மைக்ரோசாப்ட் இந்தியா உள்ளிட்ட 20 முன்னணி நிறுவனங் கள் பங்கேற்றன. இந்த நேர்காணல் மூலம் 554 மாணவ, மாணவிகள் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டனர்.
இதுகுறித்து ஐஐடி ஆலோசகர் (இண்டர்ன்ஷிப்) பேராசிரியர் என்.வி.ரவிகுமார் கூறும்போது, “ஆன்லைன் மூலம் கேம்பஸ் இன் டர்வியூ நடத்தப்பட்டது சென்னை ஐஐடி வரலாற்றில் இதுவே முதல் முறை. பெரும்பாலான மாணவர் கள் தொலைதூரப் பகுதியில் இருப்பதால் இணையவசதி தொடர்ந்து கிடைப்பதில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும். எனவே, இவற்றை கருத்தில் கொண்டு தேர்வை நடத்துமாறு நிறுவனங்களை முன்கூட்டியே அறிவுறுத்தினோம். அவர்களும் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்தனர்” என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups