ஆன்லைன் வகுப்புகள் - பலனா? பாதகமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 07, 2020

ஆன்லைன் வகுப்புகள் - பலனா? பாதகமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா தொற்று உலகமெங்கும் வாழ்க்கை முறையையே மாற்றிப்போட்டுவிட்டது. குறிப்பாக கல்வித்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் முதல் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு முறை கொண்டு வரப்பட்டது. தனியார் பள்ளிகள்தான் இதை முதலில் தொடங்கின. மாணவர்களின் கல்விக்காக என்று கூறப்பட்டாலும் கல்விக்கட்டணத்தை வசூலிப்பதற்கான ஏற்பாடே இது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மறுபுறத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளுக்கு ஆன்லைன் கல்வியைக் கொடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஸ்மார்ட் போன், இணைய வசதி போன்றவை, பொருளாதார வசதி குறைந்த பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்களிடம் இல்லை. இதனால் இவர்களால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. நேரடியான வகுப்புக்கு இணையாக ஆன்லைன் வகுப்புகள் ஒருபோதும் இருக்காது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. பள்ளி வகுப்புகளிலேயே மாணவர்களை சமாளிக்க முடியாமல் தவிக்கும் ஆசிரியர்களால், ஆன்லைன் வகுப்பை ஒருங்கிணைப்பது பெரும் சவாலாக இருக்கிறது. மாணவர்களில் பலர் பொறுப்பின்றி உள்ளனர். பெரும் சிரமத்துக்கு இடையே செல்போன், இன்டர்நெட் ஆகிய வசதிகளை பெற்றோர் செய்துகொடுக்கின்றனர். அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் ஆன்லைன் வகுப்புகளை கிண்டலுக்கும் கேலிக்கும் பயன்படுத்துகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக பெரும் மனஉளைச்சலில் இருப்பவர்கள் பெற்றோர்களே. எப்போதும் செல்போனிலேயே மூழ்கிக் கிடக்கும் தங்கள் குழந்தைகள் உண்மையிலேயே ஆன்லைன் பாடத்தைத்தான் படிக்கின்றனரா இல்லை கேம்ஸ், படங்கள் என திசை திரும்பிப் போகின்றனரா என கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இப்படி பலதரப்பையும் பாதித்து வரும் ஆன்லைன் கல்வி முறை உண்மையிலேயே பலன் தரும் முறையா அல்லது பாதக அம்சம் கொண்டதா? என்பது குறித்து நான்கு முனை பார்வை இங்கே.
CLICK HERE TO READ MORE DETAILS 1
CLICK HERE TO READ MORE DETAILS 2 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews