Breaking

Sunday, September 20, 2020

ஆசிரியர் இறந்து 20 ஆண்டுகளுக்கு பின் மகளுக்கு கருணைப் பணி நியமனம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி ஆசிரியர் இறந்து 20 ஆண்டுகளாகியும் இதுவரை, அவரது வாரிசுக்கு கருணைப் பணி வழங்கவில்லை. கல்வித் தகுதிக்கேற்ப பணி நியமனம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தில் சத்ரிய நாடார் நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஆசிரியராக பணிபுரிந்தவர் தமிழ்பொன்மணி. இவர் பணிக்காலத்தில் 1999 ல் இறந்தார். இவரது மகள் பவானி மணிமாரி கருணைப் பணி நியமனம் வழங்கக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினார்.ராமநாதபுரம் மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர், '1983 அரசாணைப்படி உதவி பெறும் பள்ளியில் நியமனம் மேற்கொள்ள பள்ளிச் செயலாளருக்கே அதிகாரம் உள்ளது.
பள்ளியில் காலிப் பணியிடம் ஏற்படும்போதே கருணைப் பணிக்கு உரிமை கோர முடியும்,' என நிராகரித்தார். இதை எதிர்த்து பவானி மணிமாரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவு: குடும்பத்திற்கு வருவாய் ஈட்டக்கூடிய அரசு ஊழியர் இறந்தால், அந்த இழப்பை ஈடுகட்டும் நோக்கில் வாரிசுக்கு கருணைப் பணி வழங்கும் நடைமுறை உள்ளது. இதில் தாமதம் கூடாது. மனுதாரரின் தாய் இறந்து 20 ஆண்டுகளாகியும் இதுவரை, கருணைப் பணி வழங்கவில்லை. அரசின் உத்தரவை தவறாக புரிந்து கொண்டு, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் கல்வித் தகுதிக்கேற்ப கருணைப் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றார் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog