ந.க.எண்:எ1/20336 /2020 நாள்: 26.09.2020.
ஆதிதிராவிடர் ஆணையரகம்
சென்னை -5.
அழைப்பாணை
பொருள்: ஆசிரியர் பணியிடம் -கல்வி- மேல்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு 01.01.2020 அன்றைய நிலையில் தகுதியுடைய உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் / முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் ஆகியோருக்கு கலந்தாய்வு மூலம் தற்காலிக பதவி உயர்வு வழங்குவது கலந்து கொள்ள அறிவுறுத்துவது – தொடர்பாக.
பார்வை:
1. சென்னை -5 ஆதிதிராவிடர் நல ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண் எ1/20336 /2020 நாள் 25.09.2020.
2. சென்னை -5 ஆதிதிராவிடர் நல ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண். எ1/20336 /2020 நாள் 25.09.2020. பார்வை (1) மற்றும் (2)-இல் காணும் இவ்வலுவலக செயல்முறைகளின்படி 01.01.2020 அன்றைய நிலையில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் நிலையிலிருந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு மூலம் நிரப்பிட தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பார்வை (1) மற்றும் (2)-இல் காணும் செயல்முறை ஆணையில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக தற்காலிக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு நந்தனம் M.C ராஜா மாணவர் விடுதி 30.09.2020 காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளதால் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் தேர்ந்தோர் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வில் கலந்துக்கொள்ள ஏதுவாக அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு - கலந்தாய்வுக்கு கலந்துக்கொள்ள வரும் ஆசிரியர்கள் கட்டாயமாக முகக்கவசம், அடையாள அட்டை அணிந்து வர வேண்டும். மேலும், சமூக இடைவெளியை பின்பற்றியே இருக்கையில் அமரவேண்டும், கலந்தாய்வில் கலந்துக்கொள்ள வரும் ஆசிரியர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவுறுத்தப்படுகிறது. ஓம்/- ச.முனியநாதன் ஆதிதிராவிடர் நல ஆணையர்
ஆதிதிராவிடர் நல ஆணையருக்காக
பெறுநர்
சம்பந்தப்பட்ட முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் / உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரிகள்
நகல்
சம்மந்தபட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.