அரசாணை (நிலை) எண்.416 - நாள்:12.08.2020 - சுதந்திர தினம், 2020 - விருதுகள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும் முதலமைச்சரின் சிறப்பு பதக்கம் - இருபத்தேழு நபர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்க ஆணை - - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 13, 2020

Comments:0

அரசாணை (நிலை) எண்.416 - நாள்:12.08.2020 - சுதந்திர தினம், 2020 - விருதுகள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும் முதலமைச்சரின் சிறப்பு பதக்கம் - இருபத்தேழு நபர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்க ஆணை -

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சுதந்திர தினம், 2020 - விருதுகள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும் முதலமைச்சரின் சிறப்பு பதக்கம் - இருபத்தேழு நபர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்க ஆணை வெளியிடப்படுகிறது. பொது (பொது-1)த் துறை அரசாணை (நிலை) எண்.416 நாள்:12.08.2020.
படிக்கப்பட்டது: 1. கடித எண்.19148/ஏடி1/2020-2, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலன் (ஏடி1)த் துறை, நாள்:10.08.2020. 2. கடித எண்.29196/பொது/2020-2, உள் (பொது)த் துறை, நாள் 10.08.2020. 3. கடித எண்.12683/எம்.இ.3/2020-2, நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை, நாள்:10.08.2020. 4. அ.சா.கு.எண்.18233/ஜி.2020, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள்:10.08.2020. 5. கடித எண்.8604/சிபி.2/2020-1, கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத் துறை, நாள்:07.08.2020
ஆணை : கொரோனா தொற்று (COVID-19) பேரிடர் காலத்தில் பல்வேறு துறைகளில் முன்களப் பணியாளர்களாக சிறப்பாக பணியாற்றியமைக்காக பதக்கம் மற்றும் சான்றிதழ் கீழ்கண்ட நபர்களுக்கு வழங்க அரசு ஆணையிடுகிறது.
(அ) மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறை
(1) மருத்துவர். ராஜேந்திரன், அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை, சென்னை .
(2) மருத்துவர். உமா மகேஸ்வரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விருதுநகர்.
(3) மருத்துவர். ஆ. சதீஷ் குமார், விரிவுரையாளர் (நிலை-2), அரசினர் சித்த மருத்துவ கல்லூரி, அரும்பாக்கம், சென்னை .
(4) திருமதி. N. ராமுதாய், செவிலியர், அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை .
(5) திருமதி. கிரேஸ் எமைமா, செவிலியர், அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை, சென்னை .
(6) திருமதி. ஆதிலட்சுமி, செவிலியர் கண்காணிப்பாளர் (நிலை-III), ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை மாவட்டம்.
(த.பி.பா) (7) திரு. எஸ். ராஜூ, துணை இயக்குநர், மாநில சுகாதார ஆய்வகம்
(பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை)
(8) திரு. முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர், கோயம்புத்தூர் சுகாதாரப் பகுதி மாவட்டம்
(9) திரு. ஜீவராஜ், ஆய்வக நுட்புநர், பழனி சுகாதாரப் பகுதி மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம்.
(ஆ) காவல் துறை
(1) திரு. எஸ். சையித் அப்தாகீர், காவலர் 1739, மணப்பாறை காவல் நிலையம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
(2) திரு. டி. நரசிம்மஜோதி, காவல் உதவி ஆய்வாளர், அனந்தபுரம் காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம்.
(3) திருமதி. இ. ராஜேஸ்வரி, சென்னை பெருநகர மகளிர் காவல் ஆய்வாளர், ஜி-5 தலைமைச் செயலக காலனி காவல் நிலையம், சென்னை .
(ஆ) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி
(1) திரு. ஐ. துரை ராபின், தீயணைப்போர் ஓட்டி 8257, நாகர்கோவில் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம், கன்னியாகுமரி மாவட்டம்.
(2) திரு. ச. பழனிசாமி, தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போர் 7549, துறையூர் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம், பெரம்பலூர் மாவட்டம்.
(3) திரு. எஸ். கருணாநிதி, முன்னணி தீயணைப்போர் 7388, மணலி தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம், சென்னை புறநகர்.
(இ நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை
(1) திரு. எஸ். ரகுபதி, துப்புரவு ஆய்வாளர், மாமல்லபுரம் பேரூராட்சி, செங்கல்பட்டு மாவட்டம்.
(2) திரு. பி. பாண்டிச்செல்வம், துப்புரவு ஆய்வாளர், கொடைக்கானல் நகராட்சி, திண்டுக்கல் மாவட்டம்.
(3) திரு. எஸ். கலையரசன், உதவி பொறியாளர், பிரிவு-102, மண்டலம்-8, சென்னை பெருநகர மாநகராட்சி.
(4) திரு. எம். ஏசுதாஸ், துாய்மைப் பணியாளர், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி, திருவள்ளூர் மாவட்டம்
(5) திரு. ஈ. ஜெய்சங்கர், துாய்மைப் பணியாளர், சென்னை பெருநகர மாநகராட்சி.
(6) திரு. மா.சங்கர், தூய்மைப் பணியாளர், ஈரோடு மாநகராட்சி. (த.பி.பா)
(ஈ) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
(1) திருமதி. எஸ். ஜெயச்சித்ரா, வட்டாச்சியர், குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.
(2) திருமதி. கே. ஜெயந்தி, மண்டல துணை வட்டாச்சியர் எண்.1, மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம்.
(3) திரு. து. பிரத்விராஜ், கிராம நிர்வாக அலுவலர், கஞ்ச நாயக்கன் பட்டி கிராமம், அருப்புக் கோட்டை வட்டம், விருதுநகர் மாவட்டம்.
(உ) கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத் துறை
(1) திரு. R. தியாகமூர்த்தி, பட்டியல் எழுத்தர், கடை எண். கே ஏ 028, அடையாறு பகுதி, மைலாப்பூர், சென்னை (தெற்கு) மண்டலம்.
(2) திருமதி. பி. ரமாமணி, விற்பனையாளர், கடை எண். கே டி 138, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, பார்வதி நகர், தாம்பரம் (மேற்கு) மண்டலம்,
சென்னை .
(3) திரு. T. தமிழ்செல்வன், விற்பனையாளர், கடை எண்.03 ஏபி 061 பிஎன், விப்பேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.
2. விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கவும் இதன் மூலம் ஆணையிடப்படுகிறது.
3. பத்தி 2-ல் ஒப்பளிக்கப்பட்ட பதக்க செலவினமான ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) கீழ்கண்ட கணக்குத் தலைப்பில் பற்று வைக்கப்பட வேண்டும். "2075 00-பல்வகை பொதுவான பணிகள்-800-ஏனைய செலவு-மாநிலச் செலவினங்கள் - BQ. துணிகரச் செயலுக்குப் பரிசுகள் - 334 - ஏனைய செலவுகள் - 01 - ஏனைய இனங்கள் (ததொகு பழையது 2075 00 800 BQ 3416) (IFHRMS புதியது 207500 800 BQ 33401)".
4. மேலே பத்தி 2-ல் அனுமதிக்கப்பட்ட பதக்கத்தின் மொத்த செலவுத் தொகையான ரூ.2,70,000/- (ரூபாய் இரண்டு லட்சத்து எழுபதாயிரம் மட்டும்), மின்ன ணு தீர்வை திட்டம் (ECS) மூலமாக மேலாளர், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், சென்னை -2 அவர்களிடம் வழங்க பிரிவு அலுவலர், பொது (பட்டியல்-அ)த் துறையின் பிரிவு அலுவலர் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. (த.பி.பா)
5. இவ்வாணைக்கு நிதித் துறையின் அரசாணை (நிலை) எண்.519, நிதி (சம்பளங்கள்)த் துறை, நாள்:29.09.1997-ல் வெளியிடப்பட்டுள்ள ஆணைகளின்படி
அத்துறையின் இசைவு தேவையில்லை.
(ஆளுநரின் ஆணைப்படி)
ப. செந்தில்குமார் அரசு முதன்மைச் செயலாளர் (மு.கூ.பொ)
பெறுநர்:
பிரிவு அலுவலர், பொது (பட்டியல்.அ)த் துறை, சென்னை -9 (2 நகல்கள்). சம்பளக் கணக்கு அலுவலர், சென்னை - 9. முதன்மை தலைமைக் கணக்காயர், சென்னை - 18. இயக்குநர், அரசு எழுதுப்பொருள் மற்றும் அச்சுத்துறை, சென்னை - 2. (அரசிதழில் வெளியிட ஏதுவாக) மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, தலைமைச் செயலகம், சென்னை -9. உள், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை, தலைமைச் செயலகம், சென்னை -9. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குல் துறை, தலைமைச் செயலகம், சென்னை -9. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தலைமைச் செயலகம், சென்னை -9. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை -9. மரு. ராஜேந்திரன், மருத்துவர், அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை, சென்னை . மரு. உமா மகேஸ்வரி, மருத்துவர், அரசு மருத்ததுவக் கல்லூரி மருத்துவமனை, விருதுநகர். மருத்துவர். ஆ. சதீஷ் குமார், விரிவுரையாளர் (நிலை-2), அரசினர் சித்த மருத்துவ கல்லூரி, அரும்பாக்கம், சென்னை . திருமதி. N. ராமுதாய், செவிலியர், அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை . கிரேஸ் எமைமா, செவிலியர், அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை. சென்னை . திருமதி. ஆதிலட்சுமி, செவிலியர் கண்காணிப்பாளர் (நிலை-III), ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. கோவை. திரு. எஸ். ராஜூ, துணை இயக்குநர், மாநில சுகாதார ஆய்வகம் (பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை) திரு. முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர், கோயம்புத்தூர் சுகாதாரப் பகுதி மாவட்டம். திரு. ஜீவராஜ், ஆய்வக நுட்புநர், பழனி சுகாதாரப் பகுதி மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம். திரு. எஸ். சையித் அப்தாகீர், காவலர் 1739, மணப்பாறை காவல் நிலையம், திருச்சி மாவட்டம். திரு. டி. நரசிம்மஜோதி, காவல் உதவி ஆய்வாளர், அனந்தபுரம் காவல் நிலையம், விழுப்புரம். திருமதி. இ. ராஜேஸ்வரி, சென்னை பெருநகர மகளிர் காவல் ஆய்வாளர், தலைமைச் செயலக காலனி காவல் நிலையம், சென்னை . திரு. ஐ. துரை ராபின், தீயணைப்போர் ஓட்டி 8257, நாகர்கோவில் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம், கன்னியாகுமரி. திரு. ச. பழனிசாமி, தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போர் 7549, துறையூர் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம், பெரம்பலூர். (த.பி.பா) திரு. எஸ். கருணாநிதி, முன்னணி தீயணைப்போர் 7388, மணலி தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம், சென்னை . திரு. எஸ். ரகுபதி, துப்புரவு ஆய்வாளர், மாமல்லபுரம் பேரூராட்சி, செங்கல்பட்டு மாவட்டம் திரு. பி. பாண்டிச்செல்வம், துப்புரவு ஆய்வாளர், கொடைக்கானல் நகராட்சி திரு. எஸ். கலையரசன், உதவி பொறியாளர், பிரிவு-102, மண்டலம்-8,
சென்னை பெருநகர மாநகராட்சி திரு. எம். ஏசுதாஸ், துாய்மை பணியாளர், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி, திருவள்ளூர் மாவட்டம். திரு. ஈ. ஜெய்சங்கர், துாய்மை பணியாளர், சென்னை பெருநகர மாநகராட்சி. திரு. மா.சங்கர், துாய்மை பணியாளர், ஈரோடு மாநகராட்சி. திருமதி. எஸ். ஜெயச்சித்ரா, வட்டாச்சியர், காஞ்சிபுரம் மாவட்டம். திருமதி. கே. ஜெயந்தி, மண்டல துணை வட்டாச்சியர், சேலம் மாவட்டம். திரு. து. பிரத்விராஜ், கிராம நிர்வாக அலுவலர், விருதுநகர் மாவட்டம். திரு. R. தியாகமூர்த்தி, பட்டியல் எழுத்தர், கடை எண். கே ஏ 028, அடையாறு பகுதி, மைலாப்பூர், சென்னை (தெற்கு) மண்டலம் திருமதி. பி. ரமாமணி, விற்பனையாளர், கடை எண். கே டி 138, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, பார்வதி நகர், தாம்பரம் (மேற்கு) மண்டலம், சென்னை . திரு. T. தமிழ்செல்வன், விற்பனையாளர், கடை எண்.03 ஏபி 061 பிஎன், விப்பேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காஞ்சிபுரம் மாவட்டம். நகல் : முதலமைச்சர் அலுவலகம், சென்னை - 9. தலைமைச் செயலரின் முதன்மைச் தனிச் செயலர், தலைமைச் செயலகம், சென்னை - 9. நிதி (பொது)த் துறை, சென்னை -9. இ.கோ /உ.ந. //ஆணைப்படி // அனுப்பப்படுகிறது// விரிவு அலுவலர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews