தொழில் நுட்பக் கல்வித் துறை - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV 2018-2019 & 2019-2020-ம் ஆண்டிற்கான இளநிலை உதவியாளர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் - பணிநியமன ஆணை வழங்குதல் - குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் செயல்முறை ஆணை எண். 7186/03/2020, நாள். 17.08.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 19, 2020

Comments:0

தொழில் நுட்பக் கல்வித் துறை - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV 2018-2019 & 2019-2020-ம் ஆண்டிற்கான இளநிலை உதவியாளர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் - பணிநியமன ஆணை வழங்குதல் - குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் செயல்முறை ஆணை எண். 7186/03/2020, நாள். 17.08.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் சென்னை, தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் முன்னிலை: திரு கே.விவேகானந்தன், இ.ஆ.ப., தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் செயல்முறை ஆணை எண். 7186/03/2020, நாள். 17.08.2020 பொருள்: நிர்வாகம் - தொழில் நுட்பக் கல்வித் துறை - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV 2018-2019 & 2019-2020-ம் ஆண்டிற்கான இளநிலை உதவியாளர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் - பணிநியமன ஆணை வழங்குதல் - குறித்து. பார்வை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய கடித எண்.2502/ PSD-I/2020, நாள் 26.05.2020 தமிழ்நாடு அமைச்சுப்பணி தொகுதி-IV-ன் கீழுள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2018-2019 & 2019-2020-ம் ஆண்டிற்கு நடத்திய போட்டித் தேர்வினில் தேர்ச்சி பெற்று, இளநிலை உதவியாளர் பதவிக்கு, இத்துறைக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல், பார்வையில் காணும் கடிதத்தின் மூலம் பெறப்பட்டுள்ளது. அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் (இணைப்பில் உள்ளவாறு), தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 சட்டப் பிரிவு 17(1)-ன்கீழ், தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2017-ன்படி, ரூ.19,500 – 62,000 என்ற ஊதிய விகிதத்தில், அடிப்படை ஊதியம் ரூ.19,500/- (Level 8) என நிர்ணயம் செய்து, முற்றிலும் தற்காலிக அடிப்படையில், இளநிலை உதவியாளராக நியமனம் செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு, அவர்களது பெயருக்கெதிரே குறிப்பிட்டுள்ள கல்லூரி / அலுவலகங்களில் பணியிடம் அளித்து ஆணை வழங்கப்படுகிறது. (இணைப்பில் உள்ளவாறு) இணைப்பில் உள்ள நபர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம் /2016, சட்டப் பிரிவு 20(5)-ன் கீழ் பணியில் சேர்வதற்கு முன்னதாக அரசு குடிமை மருத்துவரிடமிருந்து (Government Civil Surgeon) உடல் தகுதிச் சான்று (Physical Fitness Certificate) பெற்று அவர்கள் பணியேற்க உள்ள பயிலக் கல்லூரி முதல்வரிடம் ஒப்படைக்கவேண்டும். இணைப்பில் உள்ள நபர்களில் யாரேனும் ஊனமுற்றவராக இருந்தால் ஊனத்தின் தன்மை (Natue of disability), ஊனத்தின் சதவீதம் (Percentage of Handicap), பணியாற்றக்கூடிய ஆற்றல் (Capacity to perform duty) ஆகியன குறித்து மருத்துவ குழுவின் சான்று பெற்று, பணியில் சேரும் முன், அவருக்கு பணியிடம் வழங்கப்பட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவர்களது கவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம் /2016, சட்டப் பிரிவு 17(5)-ன் பால் ஈர்க்க ப்படுகிறது. மேலும் இவர்களது கவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம் /2016, சட்டப் பிரிவு 7(5)-ன் பால் ஈர்க்கப்படுகிறது. அதன்படி மேற்கண்ட நபர்கள் 11.09.2020-க்குள் பணியிடம் வழங்கப்பட்ட பயிலக / கல்லூரி / அலுவலகத்தில் பணியேற்க வேண்டும். பணியேற்க கால அவகாசம் நீட்டித்து கோரும் விண்ணப்பங்கள் மற்றும் பணியிட மாற்றம் கோரும் விண்ணப்பங்களும் ஏற்கப்படமாட்டாது. குறிப்பிட்ட நாளுக்குள் இவர்கள் பணி ஏற்கவில்லையெனில், இவர்களது பெயர் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலிருந்து நீக்கம் செய்ய, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு பரிந்துரைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி, இத்தற்காலிக நியமனம் அவர்கள் தேர்வாணையத்திற்கு அளித்துள்ள விண்ண ப்பங்களின் விவரங்களின் அடிப்படையிலான உரிமையில் வழங்கப்படுகிறது. (Based on the claim made in his application for said recruitment) அது தவறு எனத் தெரியவரும்பட்சத்தில், அவர்களின் தற்காலிக பணி நியமனம் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. பணியில் சேரும்போது அசல் சான்றுகள் அனைத்தையும் அலுவலகத் தலைவரிடம் ஒப்படைக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலே பணிநியமனம் செய்யப்பட்டவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயர் பதிவு செய்யப்பட்ட பதிவு அட்டையினை அலுவலகத் தலைவரிடம் பணியேற்கும்போது தவறாமல் ஒப்படைக்க வேண்டும். இணைப்பில் வரிசை எண்.5-ல் உள்ள திருமதி சரண்யா நடராஜன், என்பவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணி நிபந்தனை) சட்டம்/2016, சட்ட பிரிவு 21 (1)-ன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் மொழித் தேர்வினை (தமிழ்), தகுதிகாண் பருவ காலத்திற்குள் கட்டாயம் முடிக்கவேண்டும். இந்த நியமன ஆணை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் தெரிவிக்கப்பட்ட கீழ்க்காணும் நிபந்தனைக்குட்பட்டதாகும். "The regularization is subject to the outcome of the WPs pending on the files of the Hon'ble High Court of Madras/Madurai Bench of the Hon'ble High court of Madras relating to the recruitment to the post in Combined Civil Services Examinaion-IV for the year 2018-2019 and 2019-2020" இணைப்பு: | பணியிடம் வழங்கப்பட்டுள்ள விவரம் அடங்கிய பட்டியல் ஒம்/-கே.விவேகானந்தன் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பெறுநர் மேற்கண்ட நபர்கள் (இணைப்பில் உள்ளவாறு) நகல்: சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் / (தனியர் பணியில் சேர்ந்த விவரத்தினை அலுவலகத் தலைவர்கள் (இணைப்பில் உடனடியாக இவ்வலுவலகத்திற்கு உள்ளவாறு) தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.) - செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை - 3 : சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர் (தெற்கு), சென்னை -35 : சம்பந்தப்பட்ட கருவூல / துணைக் கருவூல அலுவலர் : இயக்குநரின் மேஜைக்கு * கூடுதல் இயக்குநர் (தேர்வுகள்) : துணை இயக்குநர் (நிர்வாகம்) (பொ) உதவி இயக்குநர் (நிர்வாகம்) : இயக்குநரின் நேர்முக உதவியாளர் : கண்காணிப்பாளர் 'டி' பிரிவு / 'இ' பிரிவு : 96/ டி3 இருப்புக் கோப்பு //ஆணைப்படி அனுப்பப்படுகிறது// ஜெசு நிவா இயக்குநரின் நேர்முக உதவியாளர் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews