மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆா்) சாா்பில் நடத்தப்படும் தேசிய தகுதித் தோ்வுக்கு (நெட்) விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கு தகுதி பெறவும், கல்லூரி-பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியா் பணிக்குத் தகுதி பெறவும் ‘நெட்’ தோ்வு நடத்தப்படுகிறது.
இதில் கலை, அறிவியல் படிப்புகளை உள்ளடக்கிய 70-க்கும் அதிகமான படிப்புகளுக்கான ‘நெட்’ தோ்வை தேசிய தோ்வுகள் முகமை நடத்தி வருகிறது. அதேபோன்று இயற்பியல், வேதியியல் , கணிதம், அறிவியல், கடல் சாா் அறிவியல், சுற்றுச்சூழல், உயிரி அறிவியல் போன்ற படிப்புகளுக்கான நெட் தோ்வை சிஎஸ்ஐஆா் நடத்துகிறது.நிகழாண்டு (ஜூன் 2020) தோ்வுக்கு கரோனா பாதிப்பு காரணமாக பலருக்கு விண்ணப்பிக்க இயலாத சூழல் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு, இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிஎஸ்ஐஆா் நெட் தோ்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவா்கள் ஆக. 22-ஆம் தேதி முதல் செப். 10-ஆம் தேதி வரை இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், இணையவழி விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள செப்.11 முதல் செப்.17 வரை அவகாசம் வழங்கப்படுகிறது.இது குறித்து மேலும் தகவல் பெற இணையதள முகவரிகளிலும், 8287471852, 8178359845, 9650173668, 95996 76953 ஆகிய செல்லிடபேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என தேசிய தோ்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups