Breaking

Wednesday, August 26, 2020

'நானே அரசுப்பள்ளியில் சேர்க்காவிட்டால் பொதுமக்கள் எப்படி சேர்ப்பார்கள்! '

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசுப்பள்ளியில் தன் மகனை, ஆறாம் வகுப்பு சேர்த்த, தமிழ் பட்டதாரி ஆசிரியை ஜாஸ்மின் விக்டோரியாவுக்கு, சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிகின்றன.கோவை, செம்மாண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிபவர் ஜாஸ்மின் விக்டோரியா.
இவர் தன் மகன் ஜெரிக் சாமுவேலை, ஆத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஆறாம் வகுப்பு சேர்த்துள்ளார்.தனியார் பள்ளியில் இருந்து, அரசுப்பள்ளிக்கு மாற்றி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறிய ஆசிரியை ஜாஸ்மின் விக்டோரியாவின் இந்த செயல்பாடு, பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ஆசிரியை ஜாஸ்மின் விக்டோரியா கூறுகையில், ''என் மகனை ஒன்றாம் வகுப்பிலே, அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டுமென ஆசைப்பட்டேன். வீட்டாரின் ஒத்துழைப்பு தற்போது தான் கிடைத்துள்ளது. என்னை போன்ற ஆசிரியர்களை நம்பிதான், பெற்றோர் தங்கள் குழந்தைகளைஅரசுப்பள்ளிக்கு அனுப்புகின்றனர். நானே அரசுப்பள்ளியில் சேர்க்காவிட்டால், பொதுமக்கள் எப்படி நம்பி சேர்ப்பார்கள்? இன்று, அரசுப்பள்ளிகளில் சுதந்திரமான கற்றல் முறை உள்ளது. மாற்றத்தை பிறரிடம் எதிர்பார்ப்பதை விட, நாம் முதலில் மாற வேண்டும்,'' என்றார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog