ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் நிரந்தரமாக செல்லும் என அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழ் காலாவதியாகவிருக்கும் நிலையில், அவர்கள் பணி பெறுவதற்கு வசதியாக கடந்த 6 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனங்களே நடத்தப்படாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பணி கனவு, கைக்கெட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்பதற்கு உதாரணமாகிவிடாமல் தமிழக அரசு பார்த்துக் கொள்ளவேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் அடுத்த 7 ஆண்டுகளுக்கு மட்டும்தான் செல்லுபடியாகும். அதனால், 2013-ம் ஆண்டு தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் அடுத்த சில வாரங்களில் காலாவதியாகிவிடும். அதன்பின் அவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதிபெற வேண்டும் என்றால் மீண்டும் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாக வேண்டும். மீண்டும் எப்போது தகுதித் தேர்வு நடத்தப்படும் என்பதே தெரியாத நிலையில், அவர்கள் அடுத்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன்பாக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட்டுவிட்டால், அவர்கள் தேர்ச்சி பெற்றது மீண்டும் அர்த்தமற்றதாகிவிடும். ஆகவே, 2013-ம் ஆண்டு தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் நிரந்தரமாக செல்லுபடியாகும் என்று தமிழக அரசு அறிவிப்பது தான் அனைவருக்கும் நியாயமான தீர்வாக அமையும்.
'ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் நிரந்தரமாக செல்லும் என, அறிவிக்க வேண்டும்' என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:தமிழகத்தில், ௨௦௧௩ல், நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழ் காலாவதியாகி உள்ளது. ஆறு ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் நியமனங்களே நடத்தப்படாதது, மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.பீஹார், ஹரியானா மாநிலங்களில், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள், நிரந்தரச் சான்றிதழ்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.
அதேபோல், தமிழகத்திலும் மாற்றப்பட வேண்டும்.அதன் வாயிலாக, ஆசிரியர் பணியை எதிர்பார்த்து, ஆறு ஆண்டுகளாக காத்திருக்கும், ௮௦ ஆயிரம் பேர் வாழ்வில், அரசு ஒளியேற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups