பள்ளிக்கல்வி - திருப்பூர் மாவட்டம் - தொழில்நுட்ப வளங்களை பயன்படுத்தி இணையவழி / தொலைக்காட்சி வழி கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல்-தெளிவுரைகள் வழங்குதல் சார்பு - முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் - நாள்: 24.08.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 25, 2020

பள்ளிக்கல்வி - திருப்பூர் மாவட்டம் - தொழில்நுட்ப வளங்களை பயன்படுத்தி இணையவழி / தொலைக்காட்சி வழி கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல்-தெளிவுரைகள் வழங்குதல் சார்பு - முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் - நாள்: 24.08.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருப்பூர், முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
ந.க.எண்: 4951 / ஆ4 /2019 நாள்: 24.08.2020
பொருள்: பள்ளிக் கல்வி - திருப்பூர் மாவட்டம் - தொழில்நுட்ப வளங்களை பயன்படுத்தி இணையவழி / தொலைக்காட்சி வழி கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல்-தெளிவுரைகள் வழங்குதல்-சார்பு.
பார்வை:
அரசாணை நிலை எண் 65 (பள்ளிக்கல்வி துறை) நாள் 29.07.2020
*************
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, அனைத்து வகுப்பு மாணவர்களும் வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்பதற்கு ஏதுவாக டிஜிட்டல் முறையில் பாடப்புத்தகங்கள், வீடியோபாடங்கள், கல்வி தொலைக்காட்சி, பயிற்சிதாள் (Worksheet) மற்றும் online மதிப்பீடு போன்ற செயல்பாடுகளை ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. பள்ளிக் கல்வித் துறையின் மூலம் 'வீட்டு பள்ளி' (School at Home) என்ற அணுகுமுறையின் மூலம் | முதல் XII வகுப்புகளுக்குரிய பாடங்களில் கற்றல் விளைவுகளுக்கேற்ப (LearningOutcomeBased) ஆசிரியர்களைக் கொண்டு வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. தங்களுடைய வகுப்புக்குரிய பாடங்களை தொழில்நுட்ப வளங்களை பயன்படுத்தி கற்க மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து செயல்படவேண்டும். அதற்கான உரிய வழிகாட்டுதலை வழங்கிட அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

பள்ளிகளில் வகுப்புவாரியாக அமைக்கப்பட்டுள்ள இந்த Whatsapp குழுக்களில் elearn.tnschools.gov.in மற்றும் TNTP-ல் உள்ள பாடவாரியான வளங்களை பகிர்ந்திடவும் இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை உறுதி செய்திட கீழ்க்காணும் வழிகாட்டுதல்களை பின்பற்றிட அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1.பள்ளித் தலைமையாசிரியர்கள் கல்வித் தொலைக்காட்சியின் அட்டவணையினை முறையாகப் பின்பற்றி அதற்கேற்ப மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

2.அனைத்து வேலைநாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்களது இணையவழி / தொலைக்காட்சி வழி கற்றல் VideoLesson சார்ந்த தொடர்பணிகளை மதிப்பீடு செய்தல் மற்றும் உடனடியாக பின்னூட்டம் (Feedback) வழங்குதல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும். 3. அனைத்து வேலைநாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை Onlineமூலம் கற்றல் மற்றும் அது சார்ந்த ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண் டியதொடர்பணி (Followup) நடைபெறுவது உறுதி செய்து உரிய அலுவலர்களுக்கு வகுப்புவாரி செயல்பாட்டு அறிக்கையினை தினந்தோறும் அனுப்பப்படல் வேண்டும்.

4. பள்ளிக்கல்வித் துறையினால்,1 முதல் 12 வகுப்புகளுக்கு வீடியோ பாடங்கள் கல்வித் தொலைக்காட்சியால் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 10 முதல் 15 நிமிடங்கள் முன்னதாகவே மாணாக்கர்கல்வித் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படும் VideoLessonஐ பார்த்திட தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

5.03.08.2020 முதல் அரசால் அனுமதிக்கப்பட்ட தொலைக்காட்சி மூலம் வீடியோ பாடங்கள் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது.

6. 1முதல் 12 ஆம் வகுப்புகளுக்குரிய அனைத்து பாடப்புத்தகத்தில் உள்ள QRcode-ல் ஆடியோ வீடியோ பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை மாணவர்கள் தங்கள் Smartphone /Laptop மூலம் DIKSHA app download செய்து QR code மூலம் பயன்படுத்துவதற்கு ஆசிரியர்கள் வழிகாட்டுதல் வேண்டும். 7. https://e-learn.tnschools.gov.in/ https://diksha.gov.in/tn or https://diksha.gov.in/explore, https://www.kalvitholaikaatchi.com போன்ற இணை யதளங்களை பயன்படுத்தி download செய்து offline லும் கற்றலை மேற்கொள்ள வழிகாட்டுதல்வேண்டும்.
8. ஏற்கனவே வகுப்புவாரியாக அமைக்கப்பட்டுள்ள Whatsapp குழுக்களில் ஆசிரியர்கள் தொடர்ந்து மாணவர்களுடன் கற்றல் வளங்களை பகிர்ந்து கொள்வதுடன் அவர்களின் சந்தேகங்களை சம்மந்தப்பட்ட ஆசிரியர் நிவர்த்தி செய்திட வேண்டும்.

9. மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில், பாடப்பகுதி சார்ந்த ஒப்படைவுகள்(Assignment) பயிற்சித்தாள்கள் (Worksheet) தொடர் பணிகள், கொடுத்திடவும், கொடுக்கப்பட்ட ஒப்படைவுகளை (Assignments) மதிப்பீடு (Evaluation) செய்து தொடர்ந்து கண்காணித்து மாணவர்களை தொடர்பு கொண்டு அதன் நிலை குறித்து கேட்டறிந்திடவும் மாணவர்கள் அனுப்ப இயலாத நிலையில் அதை பாதுகாப்பாக வைத்து பள்ளி திறக்கும்போது கொண்டுவர செய்திடவும் வேண்டும். ஒப்படைவுகள் (Assignments) சமர்ப்பித்த மாணவர்களின் Assignment-ஐ மீளாய்வு செய்து அவர்களுக்கு உரிய அறிவுரைகளை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் வழங்கிடவேண்டும்.

10. ஒவ்வொரு பாடப்பகுதியையும் மாணவர்கள் கற்றபிறகு அவர்களின் கற்றல் விளைவுகளை கண்டறிய மாணவர்களுக்கு உரிய வினாத்தாள்கள் மற்றும் பயிற்சித்தாள்களை (Worksheets)அனுப்பி சம்மந்தப்பட்ட ஆசிரியர் மதிப்பீடு செய்யலாம். 11. மொழிப்பாடப்பயிற்சிகளுக்கு, உச்சரிப்பு மற்றும் வாசித்தல் திறனை மேம்படுத்த ஆசிரியர் மற்றும் மாணாக்கர்குரல் பதிவு (Voice Recording) அல்லது வீடியோபதிவு (VideoRecording) உத்தியைப் பயன்படுத்தி கற்றல் மற்றும் மதிப்பீட்டுப் பணிகளை (Evaluation) மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

12. ஒவ்வொரு பாடப்பகுதிக்குரிய செயல்பாடுகளை மாணவர்கள் முடித்தபிறகு ஆசிரியர்கள் அவர்களை தொடர்பு கொண்டோ அல்லது குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமோ மாணாக்கரின் முன்னேற்றம் குறித்த தங்களுடைய பாராட்டுக்களை தெரிவிக்கலாம். இதன் மூலம் மாணவர்களின் இணையவழி தொலைக்காட்சி வழி கற்றலை ஊக்குவிக்க இயலும்.

13. அனைத்து மாணவர்களும் தொடர்ச்சியாக கற்றல்செயல்பாடுகளில் பங்கேற்பதை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்திட வேண்டும்.

14. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு டிஜிட்டல் கற்றலில் ஆதரவளிக்கும் நிலையில் இல்லாத போது உள்ளூர் தன்னார்வலர்கள் மற்றும் அருகில் உள்ளவரிடம் ஆதரவை நாடுவதற்கு பரிந்துரைக்கலாம்.
15. ஆசிரியர்கள் பெற்றோர்களிடமும் மாண வர்களிடமும் இணைய பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

16. ஆசிரியர் தங்கள் வகுப்பு மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் குறித்து உரிய பதிவேடுகளில் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.

17.பள்ளித்தலைமையாசிரியர் ஆசிரியர்களிடம்தங்கள்வகுப்பு மாணவர்களின் இணையவழி தொலைக்காட்சி வழி கற்றல் குறித்து மீளாய்வு செய்து பதிவேட்டில் பதிவு செய்திடல் வேண்டும்.

18. கலை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உரிய நாட்களில் தங்களது வகுப்புவாரி செயல்பாடுகளை "தொலை நிலை பயிற்சி" மூலம் மேற்கொண்டு செயல்படவும் உரிய பதிவேடுகளைபராமரிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

19. இணையவழி /தொலைக்காட்சி வழி கற்றல்மற்றும் தொடர்செயல்பாடுகளில் அனைத்து மாணவர்களும் முழுமையாக பங்கேற்பதை ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் உறுதிப்படுத்திடவும், மாணாக்கர்களுக்கு தக்க வழிகாட்டுதல்கள் வழங்கிடவும் அறிவுறுத்தப்படுகிறது. மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து செயல்பாடுகளும் நடைபெறுவதை வகுப்பாசிரியர்மற்றும் பாட ஆசிரியர்கள் உறுதி செய்திடவும், அதனை தலைமையாசிரியர் கண்காணித்திடவும் அறிவுறுத்தப்படுகிறது. இச்செயல்பாடுகளை குறுவளமையபள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் குறுவளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கண்காணித்து வாரந்தோறும் தங்கள் குறுவளமையத்திற்குட்பட்ட பள்ளிகளில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கையை குறுவளமைய அளவில் தொகுத்து வட்டாரவளமையம் மூலம் தொகுத்து மாவட்டத் திட்ட அலுவலர் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

மேலும் வட்டார அளவில் வட்டாரக்கல்வி அலுவலர்களும்,கல்வி மாவட்ட அளவில் மாவட்டக்கல்வி அலுவலர்களும் மேற்கண்ட செயல்பாடுகளைக் கண் காணி த்து பங்கேற்ற பள்ளிகள் மற்றும் மாண வர்களின் எண்ணிக்கையை தொகுப்பறிக்கையாக தயாரித்து மாதம் ஒரு முறை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இணைப்பு:அரசாணை நகல்
முதன்மைக் கல்வி அலுவலர், திருப்பூர்.
பெறுநர்:
1.மாவட்டக் கல்வி அலுவலர்கள், திருப்பூர் பல்லடம் தாராபுரம்/உடுமலை- தொடர் நடவடிக்கையின் பொருட்டு.
2. அனைத்து அரசு/நகரவை/உதவிபெறும் உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் , திருப்பூர் மாவட்டம்.
3. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் (தொடர்நடவடிக்கைக்காக)
4. அனைத்து குறுவளமைய பள்ளித் தலைமையாசிரியர்கள்
5.அனைத்து வட்டார வளமையபொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள்
நகல் :
முதல்வர்,மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும்பயிற்சி நிறுவனம், திருமூர்த்தி நகர். - அன்புடன் அனுப்பலாகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews