வகுப்புக்கு வந்தாலும் ஆப்சென்ட்: 100% தேர்ச்சிக்காக பள்ளியின் இரக்கமற்ற செயல் - 10-ம் வகுப்பில் 5 பேர் மட்டும் தோல்வியடைந்த சோகம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 20, 2020

வகுப்புக்கு வந்தாலும் ஆப்சென்ட்: 100% தேர்ச்சிக்காக பள்ளியின் இரக்கமற்ற செயல் - 10-ம் வகுப்பில் 5 பேர் மட்டும் தோல்வியடைந்த சோகம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு மாணவர்கள் பதினொன்றாம் வகுப்புக்கு செல்ல தயாராகி விட்டனர். ஆனால், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த ஒரு மாணவி உட்பட 5 மாணவர்கள் பத்தாம் வகுப்பை கடக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்த 10ம் வகுப்பு தேர்வுக்காக மாணவர்கள் தயாராகி வந்த நிலையில், வாடிப்பட்டியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியான சார்லஸ் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற ஒரு மாணவி உட்பட 5 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பெற்றோ,ர் மாணவர்களிடம் விசாரித்த போது, சுமாராக படிக்கும் 5 பேரை தனியாக பிரித்து, தினமும் பள்ளிக்கு வந்தாலும் வகுப்பறையில் அமர வைக்காமல் வெளியில் அமர வைக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும், 5 பேருக்கும் நாள்தோறும் வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடப்பட்டதாகவும் மாணவர்கள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து பள்ளி உதவி தலைமையாசிரியரான அருளப்பரிடம் முறையிட்டபோது, தங்கள் பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதால் அவர்களை அடுத்தாண்டு தயார் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்த நிலையில் முதன்மை கல்வி அலுவலரிடம் ஆதாரத்துடன் புகார் அளித்திருந்தனர். இந்த சூழலில், தற்போது வெளியான மாணவர்கள் தேர்ச்சி பட்டியலில் ஆப்சென்ட் போட்டு தேர்வுக்கு பரிந்துரை செய்யாத ஐந்து மாணவர்கள் பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது முதல்வரின் தனிப்பிரிவிலும், முதன்மை கல்வி அலுவலரிடமும் பெற்றோர் புகார் அளித்தனர். மேலும், வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, புகார் ரசிதும் பெறப்பட்டுள்ளது. ஆனாலும் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் பஞ்சாயத்து பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்க முயன்ற போது, அவர்கள் தரப்பில் பதிலளிக்க மறுத்து விட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற வேண்டும் என்பதற்காக, பள்ளியில் பயின்ற மாணவர் ஒருவருக்கு பள்ளி நிர்வாகம் வலுக்கட்டாயமாக மாற்று சான்றிதழை வழங்கியுள்ளது. இதனால் மகனுக்கு வலுக்கட்டாயமாக டி.சி கொடுத்த தனியார் பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென மாணவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். பொள்ளாச்சி சாராட்சியரிடம் புகார் அளித்துள்ள இவர்கள் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையை சேர்ந்த சிவக்குமார்-கற்பகம் தம்பதியினர் ஆவர். இவரது மகன் ஹரிகிருஷ்ணன் ஆனைமலையை அடுத்த காலியாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். ஆனால் இந்த மாணவன் ஓரளவு மட்டுமே படிப்பதால், பள்ளியை விட்டு நின்று விடுமாறு பள்ளி நிர்வாகத்தினர் மிரட்டினர் என்பது புகாராகும். மேலும் தங்களது மகனான ஹரிகிருஷ்ணனை பள்ளி ஆசிரியர்கள் அடித்து துன்புறுத்தி வலுக்கட்டாயமாக டி.சியை பெற வைத்தனர் என்று பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். காலாண்டு தேர்வு எழுதிவிட்டு அரையாண்டு தேர்வில் 2 பாடங்களுக்கு மட்டுமே ஹரிகிருஷ்ணன் தேர்வெழுதியுள்ளார். இதனையடுத்து 10ம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலாண்டு மற்றும் அரையாண்டு தொடர்பான மதிப்பெண்களை கல்வி துறைக்கு பள்ளி நிர்வாகம் வழங்கவில்லை என்பது புகாராகும். இதனையடுத்து பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை காட்ட வேண்டும் என்பதற்காக தனது மகனின் வாழக்கையை பள்ளி நிர்வாகம் சூறையாடிவிட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டிருக்கின்றனர். மேலும் தங்கள் மகனை 10ம் வகுப்பில் தேர்ச்சிபெறவிடாமல் செய்து கட்டாயப்படுத்தி மாற்று சான்றிதழ் கொடுத்த பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews