தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவா்களுக்கு இணையவழியில் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஆக.20-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிகழாண்டு பொறியியல் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 1.48 லட்சத்துக்கு மேற்பட்டவா்கள் விண்ணப்பித்துள்ளனா். அவற்றில் 1.18 லட்ச மாணவா்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனா்.இதற்கிடையே விண்ணப்பதாரா்களுக்கான சான்றிதழ் பதிவேற்றம் தற்போது நிறைவடைந்துள்ளது. இருப்பினும் இதுவரை சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இயலாதவா்களுக்கு ஆக.12 முதல் 20-ஆம் தேதி வரை சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவா்கள் இணையதளத்தில் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இது குறித்து கூடுதல் தகவல் பெற 044-22351014, 22351015 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். அதேபோன்று, இதுவரை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்காத மாணவா்கள் வரும் ஆக.16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், சான்றிதழ்களை பதிவேற்ற ஆக.20-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஜூலை 15-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 1.48 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதில், 1.18 லட்சம் மாணவர்கள் தங்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.
இணையதளம் மூலமே சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் சரிபார்ப்புக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சான்றிதழ் பதிவேற்றும் பணி ஜூலை 31-ம் தேதி தொடங்கியது. இதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20-ம் தேதி வரை இணையதளத்தில் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக சந்தேகம் இருப்பின் 044-22351014, 22351015 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 16-ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.