பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு உண்டு என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துக்களை பிரிக்கும்போது சமபங்கு வழங்க வேண்டும். பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில் சமபங்கு வழங்கக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஆண்களைப் போலவே பெண்களுக்கு சொத்துரிமையில் சமபங்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சொத்துக்களை பிரிக்கும் போது ஆண்களைப் போலவே பெண் பிள்ளைகளுக்கும் சமபங்கு வழங்ககோரிய வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இத்தகைய தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரையில் கடந்த 2005ம் ஆண்டிற்கு முன்பு இருந்த இந்து வாரிசு உரிமை சட்டத்தில் பெற்றோர்களின் சொத்தில் ஆண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றிருந்தது.
அதே சமயத்தில் 2005ல் பெற்றோர்களின் சொத்தில் ஆண்களை போலவே பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்று சட்ட திருத்தும் கொண்டுவரப்பட்டு இயற்றப்பட்டது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், ஏற்கனவே 2005ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள இந்திய வாரிசு உரிமை சட்ட திருத்தும் செல்லும் என்றும், பெற்றோர்களின் சொத்தில் ஆண்களுக்கு பங்கு இருப்பது போலவே பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது பெண்களுக்கு சாதகமான ஒரு தீர்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.