Breaking

Tuesday, August 04, 2020

'அரசு பள்ளி மாணவர்கள் ஆசையை தடுக்க கூடாது': பா.ஜ., ஊடகப் பிரிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு பள்ளி மாணவர்கள், பல மொழிகளை கற்கும் ஆற்றலை தடுக்கும் வகையில், தமிழக அரசு செயல்படக் கூடாது' என, தமிழக பா.ஜ., ஊடகப் பிரிவு தலைவர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:தமிழகத்தில், 50 ஆண்டு களாக, இரு மொழி கல்வி இருப்பதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால், தனியார் பள்ளிகளில், பல ஆண்டுகளாக மும்மொழி திட்டம் தான் உள்ளது. ஐ.சி.எஸ்.சி.இ., -- சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் இயங்கும் பள்ளிகளில், மும்மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.இவற்றில், 90 சதவீதம், மூன்றாவது மொழியாக ஹிந்தி உள்ளது. ஸ்டாலின் கூறுவது போல, இரு மொழி கல்வி, அரசு பள்ளிகளில் மட்டுமே உள்ளது. அரசு ஒரு கொள்கை வகுத்தால், அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அரசு பள்ளிகளுக்கு, ஒரு கொள்கை என்பது பாகுபாடாக உள்ளது.தமிழகத்தில் உள்ள, தனியார் கல்வி நிறுவனங்களில் கணிசமானவை, தி.மு.க.,வினரால் நடத்தப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அங்கெல்லாம் மும்மொழி கல்வி தான்.ஹிந்தி கட்டாயம் இல்லாத, மத்திய அரசு நடத்தும், இலவச உறைவிட பள்ளியான, நவோதயா பள்ளிகளை, தி.மு.க., எதிர்க்கிறது.ஆனால், தமிழுக்கே இடமில்லாத ஹிந்தி கட்டாயமாக உள்ள, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர, தி.மு.க.,வினர் போட்டி போடுகின்றனர். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒவ்வொரு எம்.பி.,யும், ௧௦ மாணவர்களை சேர்க்க பரிந்துரைக்க முடியும். ஹிந்தி படிக்க, தி.மு.க.,- - எம்.பி.,க்கள் பரிந்துரை செய்து விட்டு, ஹிந்தியை எதிர்க்கின்றனர்.ஏழை அரசு பள்ளி மாணவர்கள், பல மொழிகளை கற்கும் ஆற்றலை, ஆசையை தடுக்கும் வகையில், தமிழக அரசு செயல்படக் கூடாது.இவ்வாறு, பிரசாத் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog