உள்ளுறுப்புக்கள் தான் யோகாசனத்தில் முழுக்க முழுக்கப் பயன்படுகின்றன. உள்ளுறுப்புக்கள் தூய்மைபெற, வலிமையுற பயிற்சி செய்யும் நேரத்தில், மிகவும் நியமத்துடன், பயபக்தியுடன் நெறிபிறழாது செய்ய வேண்டும்.
அவசரமும் பதட்டமும் உள்ளுறுப்புக்களை தலைகீழாக்கித் திசைமாற்றி, நம்மைக் கவலைக்குள்ளாக்கி விடும்.
எச்சரிக்கை இது. கவனம் வேண்டும்.
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உற்றுழி உதவும் குறிப்பு நூலாகவும், பள்ளி மாணவர்கள் பாங்குடன் புரிந்து கொண்டு, பக்குவமாக செய்து பழகவும், பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளோர் அனைவருக்கும் உதவும் வகையிலேதான் இந்நூல் எழுதப் பெற்றிருக்கிறது.
ஒவ்வொரு ஆசனத்திற்கும் உரிய பெயர் விளக்கம், ஆசனம் செய்கின்ற முறை, செய்தபின் பெறும் பயன்கள்; அதனை எண்ணிக்கையில் செய்யும் முறை என்ற வகையில் 32 யோகாசனங்கள் படங்களுடன் தரப்பட்டிருக்கின்றன.
எப்பொழுதும் தனியாக ஆசனம் செய்யாமல், தெரிந்தவர் துணையுடன் செய்வதுதான் சிறந்த முறையாகும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.