உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு, அடுத்த 2 ஆண்டுகளுக்கு தற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்விச் சான்றிதழ் செல்லாதாகிவிடும் என்பதால் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
பள்ளிக்கல்வி - தமிழகத்தில் சுயநிதியில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகள், நிதி உதவிபெறும் அனைத்து வகையான பள்ளிகள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள், 0. மெட்ரிகுலேசன் மற்றும் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் - உரிய அமைப்பிடமிருந்து - பள்ளிக்கட்டிட அனுமதி பெறாத பள்ளிகளின் தற்காலிகத் தொடர் அங்கீகாரம் 31.05.2022 வரை நீட்டித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD G.O PDF
பள்ளிக்கல்வி (MS)த் துறை அரசாணை (நிலை) எண்.66
நாள் 03.08.2020. திருவள்ளுவர் ஆண்டு 2051 சார்வரி வருடம், ஆடி 19 படிக்கப்பட்டவை:
1. அரசாணை (நிலை) எண்.270, பள்ளிக்கல்வி (எக்ஸ்2)த் துறை, நாள் 22.10.2012. 2. அரசாணை (நிலை) எண்.134 பள்ளிக் கல்வி (பொ.நூ. 2)த் துறை, நாள். 18.08.2015. 3. அரசாணை (நிலை) எண்.73 பள்ளிக்கல்வி (பொ.நூ. 2)த் துறை, நாள் 22.04.2017. 4. அரசாணை (நிலை) எண்.167 பள்ளிக் கல்வி (எம்எஸ்)த் துறை நாள். 07.08.2018. 5. அரசாணை (நிலை) எண்.79, பள்ளிக்கல்வி (எம்எஸ்)த் துறை, நாள் 06.05.2019. 6. மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் கடித ந.க.எண்.0763 /அ1/ 2020, நாள்
04.03.2020. 12.05.2020
ஆணை
CLICK HERE TO DOWNLOAD G.O PDF
மேலே ஆறாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர், பள்ளிக் கட்டடங்களுக்கான வரைபட அனுமதி முறையாகப் பெற்றபின்னரே கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் என மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணையிடப்பட்டது என்றும், இவ்வரசாணை வெளியிடப்படுவதற்கு முன்னர்வரை பள்ளிக் கட்டடங்களுக்கான வரைபட அனுமதி, நகர் மற்றும் ஊரமைப்புத் துறை / உள்ளூர் திட்டக்குழுமம்/ சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் பெறப்பட வேண்டும் என எவ்வித அரசாணையும் இத்துறை மூலம் வழங்கப்படாத நிலையில், உள்ளாட்சி அமைப்பிடம் பெறப்பட்ட பள்ளிக் கட்டட வரைபட அனுமதியினைக் கொண்டு பள்ளி தொடங்க அனுமதி மற்றும் அங்கீகாரங்கள் வழங்கப்பட்டு வந்தன என தெரிவித்துள்ளார்.
2. மேலும், உரிய அங்கீகாரம் பெறாமல் பள்ளிகளை நடத்துவது இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009இன்படி சட்டத்தை மீறிய செயல் என்பதைக் கருத்தில் கொண்டும், பள்ளி வாகனங்களின் தரச்சான்றினை புதுப்பிக்கவும், பள்ளிகளில் ஏற்படும் சிறு சிறு நிர்வாக பிரச்சனைகளைத் தீர்க்கவும், பள்ளிக்கு அங்கீகாரம் தேவை என்பதாலும், பள்ளிகளில் பயின்று வரும் மாணவ/ மாணவிகளின் நலன் கருதியும், ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு நடைபெற்று வரும் பள்ளிகள் உள்ளாட்சி அமைப்பிடம் பள்ளிக் கட்டட வரைபட அனுமதி பெற்றிருப்பின், அப்பள்ளிகளுக்கு "நகர் மற்றும் ஊரமைப்புத் துறை / உள்ளூர் திட்டக் குழுமம்/ சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் கட்டட வரைபட அனுமதி பெற்று சமர்ப்பிக்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் 31.05.2016 வரை மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையிலும், மேலும் அதன் தொடர்ச்சியாக மேலே மூன்று முதல் ஐந்து வரைபடிக்கப்பட்ட அரசாணைகளில் முறையே 31.05.2018, 31.05.2019 மற்றும் 31.05.2020 வரை பள்ளிகளுக்குத் தற்காலிக தொடர் அங்கீகாரம் நீட்டித்து வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
CLICK HERE TO DOWNLOAD G.O PDF
3. இதன் தொடர்ச்சியாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர், தனது கருத்துருவில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்:
(i) தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் (திருத்தப்பட்ட) சட்டம், 2010-இன்படி தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டம், 1971-ல் பிரிவு 47A சேர்க்கப்பட்டு, இச்சட்டம், 01.01.2011 முதல் நடை முறைக்கு வரும் என அரசாணை (நிலை) எண்.302, வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத் துறை நாள். 29.12.2010-ன்படி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
(ii) மேற்படி திருத்தப்பட்ட சட்டத்தின்படி, 01.01.2011-க்குப் பிறகு கட்டப்படும் கட்டடங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்குவதற்கு முன்னர், நகர் மற்றும் ஊரமைப்புத்துறை இயக்குநரின் இசைவினைப் பெறவேண்டும். பல்வேறு தனியார் சுயநிதிப்பள்ளி நிர்வாகங்கள் 01.01.2011-க்கு முன்னரும் எவ்வித உள்ளாட்சி அமைப்பிடம் இருந்தும் கட்டட வரைபட அனுமதி பெறாமல் பள்ளிக் கட்டடங்கள் கட்டியும், 01.01.2011-க்கு பின்னர் நகர் மற்றும் ஊரமைப்புத் துறையின் இசைவு பெறாமல் உள்ளாட்சி அமைப்பிடம் மட்டும் கட்டட வரைபட அனுமதி பெற்றும் கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தப்பட்ட) சட்டம், 2010-ன் பிரிவு 47A-ல் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி புதியதாக பள்ளிக் கட்டட வரைபட அனுமதி பெற வேண்டும்.
CLICK HERE TO DOWNLOAD G.O PDF
(iv) மேலும், மேற்காணும் பள்ளிகள் அல்லாது, 01.01.2011-க்குப் பின்னர் முறையாக நகர் மற்றும் ஊரமைப்புத்துறை இயக்குநரின் இசைவுடன் உள்ளாட்சி அமைப்பிடம் பள்ளிக் கட்டட வரைபட அனுமதி பெற்று கட்டப்பட்டு செயல்பட்டு வரும் பள்ளிகளில் சில பள்ளிகள், அப்பள்ளி வளாகத்திலேயே கூடுதல் வகுப்புகளுக்காக கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கு நகர் மற்றும் ஊரமைப்புத்துறையின் இசைவு பெறாமல் உள்ளாட்சி அமைப்பிடம் மட்டும் கட்டட வரைபட அனுமதி பெற்று கூடுதல்
கட்டடங்கள் கட்டி செயல்பட்டு வருகின்றன.
(v) இவ்வாறு முறையான கட்டட அனுமதி பெறாமல் பள்ளிக் கட்டடங்கள் கட்டிய பள்ளிகளுக்கு, கட்டட வரன்முறைக்கு விண்ணப்பிக்க 31.05.2020 வரை வாய்ப்பு வழங்கி தொடர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009, பிரிவு 18(5)-ன்படி அங்கீகாரம் முடிவடைந்த நிலையிலும், பள்ளியை நடத்தி வருவது சட்டத்தினை மீறிய செயலாகும் என்பதாலும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவ மாணவியர்களை அனுப்ப பள்ளி அங்கீகாரம் பெறப்பட்டிருக்க வேண்டும் என்பதாலும், இவ்வகைப் பள்ளிகளில் பயின்று வரும் பல இலட்சம் மாணவ / மாணவியரின் கல்விச் சான்று தகுதி உடையதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதாலும் மற்றும் பள்ளி வாகனங்களின் தரச்சான்றினை புதுப்பிக்கவும் அங்கீகாரம் நடப்பில் இருக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே, சுயநிதியில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகள், நிதியுதவி பெறும் அனைத்து வகையான பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மற்றும் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றிற்கு தொடர் அங்கீகாரம் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் (31.05.2022) நீட்டித்து வழங்க அனுமதி ஆணை வழங்கக் கோரியுள்ளார்.
CLICK HERE TO DOWNLOAD G.O PDF
4. பள்ளி மாணாக்கர்களின் நலனைக்கருதி மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரது கோரிக்கை அரசால் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு கட்டட வரன்முறைக்கு விண்ணப்பிக்க நகர் மற்றும் ஊரமைப்புத் துறையினால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, கட்டட வரன்முறை செய்யாத இனங்கள் சார்ந்து அரசினால் அவ்வப்போது சிறப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், கட்டட வரன்முறைப்படுத்தாத பள்ளிகள், அவ்வப்போது வெளியிடப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்க அவகாசம் வழங்க ஏதுவாகவும், இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசால் வெளியிடப்படும் கட்டட வரன்முறை சார்ந்த சிறப்புத் திட்டங்களை பயன்படுத்தி தங்களது கட்டடத்தினை முறைப்படுத்த கட்டாயமாக விண்ணப்பித்து கட்டட அனுமதி பெறவேண்டும் என்றும், இதற்குமேல் வாய்ப்பு ஏதும் வழங்க இயலாது என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் 01.06.2020 முதல் 31.05.2022 வரை இரண்டாண்டுகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்க, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநருக்கு அனுமதியளித்து அரசு ஆணையிடுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
CLICK HERE TO DOWNLOAD G.O PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.