சின்ன சின்ன தவறுகள்.. தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க என்ன காரணம்? வல்லுநர்கள் தந்த விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 28, 2020

Comments:0

சின்ன சின்ன தவறுகள்.. தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க என்ன காரணம்? வல்லுநர்கள் தந்த விளக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள் என்ன என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருகிறார்கள். தமிழகத்தில் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. தமிழகத்தில் மே 30ம் தேதி கணக்குப்படி 160 பேர் கொரோனா காரணமாக மரணம் அடைந்து இருந்தனர். ஜூன் 27ம் தேதி கணக்குப்படி 1025 பேர் தமிழகத்தில் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அதேபோல் மே 30ம் தேதி கணக்குப்படி 21184 பேர் மட்டுமே தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது ஜூன் 27ம் தேதி நிலவரப்படி 78,335 பேர் தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. என்ன காரணம்
இந்த நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள் என்ன என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருகிறார்கள். அதன்படி அரசியல் ரீதியான காரணங்கள், சுகாதாரத்துறை - முனிசிபல் கார்ப்பரேஷன் இடையே சரியான ஒற்றுமை இல்லாதது, சரியான நேரத்தில் டெஸ்டிங் செய்யப்படாதது, மக்கள் சரியான வகையில் சென்னையில் விதிகளை பின்பற்றாதது ஆகியவைதான் முக்கியமான காரணம் என்று கூறி உள்ளனர்.

எப்படி டெஸ்டிங்
தமிழகத்தில் ஏற்பட்டு கேஸ்களில் மொத்தம் 68% கேஸ்கள் சென்னையில்தான் ஏற்பட்டு உள்ளது. சென்னையில் தொடர்ந்து பல்வேறு கிளஸ்டர் பரவல்கள் ஏற்பட்டது. கோயம்பேடு கிளஸ்டர் தொடங்கி வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த பயணிகள் மூலம் சென்னையில் அடுத்தடுத்து கிளஸ்டர் பரவல் ஏற்பட்டது. அதோடு இல்லாமல் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த பயணிகளில் பெரும்பாலோனோர் சென்னை வந்ததும் இந்த கிளஸ்டர் பரவலுக்கு காரணம் ஆகும். டெஸ்டிங் தாமதம்
தமிழகத்தில் மார்ச் மாதத்தில் லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் போதுமான அளவு டெஸ்டிங் செய்யப்படாததே கேஸ்கள் அதிகரிக்க காரணம் என்று கூறுகிறார்கள். தொடக்கத்தில் தமிழகத்தில் 5000+ சோதனைகள் மட்டுமே செய்யப்பட்டது. அப்போதே அதிக அளவில் சோதனைகளை செய்து இருந்தால் தமிழகத்தில் இப்போது இவ்வளவு பெரிய பரவல் ஏற்பட்டு இருக்காது என்கிறார்கள். தமிழகத்தில் மே இறுதியில்தான் தினமும் 15 ஆயிரம் சோதனைகளே செய்யப்பட தொடங்கியது. தமிழகத்தில் தற்போது தினமும் 33 ஆயிரம் சோதனைகளை செய்யப்படுகிறது. இப்போது திடீரென கேஸ்கள் அதிகரிக்கவும் இதுதான் காரணம் என்கிறார்கள்.

இறப்பு அதிகம்
அதேபோல் போக போக தமிழகத்தில் பலி எண்ணிக்கை அதிகம் ஆனது. இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. அதிக நோய் இருக்கும் பலருக்கு கொரோனா வந்தது முக்கிய காரணம் என்கிறார்கள்.தமிழகத்தில் பலியாகும் 84% பேருக்கு கோமார்பரிட்டி எனப்படும் இதய பிரச்சனை, வயோதிகம், பிற நோய்கள் உள்ளது . கோமார்பரிட்டி இல்லாத 16% பேர் பலியாகி உல்ளனர். அதேபோல் தமிழகத்தில் சர்க்கரை வியாதி, ஹைப்பர் டென்ஷன் அதிகம் இருக்கும் நபர்கள்தான் அதிகம் பலியாகிறார்கள். கடைசி நேரத்தில் வருகிறார்கள்
ரத்த கொதிப்பு இந்த மரணத்திற்கு முக்கிய காரணம் ஆகும். முக்கியமாக கொரோனா நோயாளிகளுக்கு ஏற்கனவே இருந்த நோய்களும், உடல் பிரச்சனைகளும் மரணத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 30-40 வயது நபர்களும் பலியாகி வருகிறார்கள். ஆனால் உண்மையில், தமிழகத்தில் பலியாகும் நபர்களில் அதிகமானோர் 50+ வயதை அடைந்தவர்கள். இளம் வயதினர் தமிழகத்தில் குறைவாகவே பலியாகிறார்கள். சென்னையில்தான் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

சென்னை கொஞ்சம் தப்பித்தது
தமிழகத்தில் தற்போதும் கூட பலி எண்ணிக்கை அதிகம் இல்லை. கேஸ்கள் அதிகரிக்க அதிகரிக்க பலி எண்ணிக்கை அவ்வளவு வேகமாக உயரவில்லை. தற்போது தமிழகத்தில் பலி எண்ணிக்கை சதவிகிதம் 1.2% ஆக உள்ளது. திடீர் என்று அதிகரித்த பலி எண்ணிக்கை இந்த சதவிகிதத்தை உயர்த்தி உள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நிலைமை அவ்வளவு மோசமாக உள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் போதுமான பெட்கள் எப்போதும் போல இருக்கிறது. தப்பிக்க தொடங்கும்
தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த சென்னையில் மொத்தமாக லாக்டவுன் போடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு வந்துள்ளது.12 நாட்கள் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். லாக்டவுன் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் வுஹன் போலவே டெஸ்டிங் அதிகரிக்க முயன்று வருகிறார்கள். அதன் ஒரு கட்டமாகத்தான் தற்போது சென்னையில் தாறுமாறான வேகத்தில் டெஸ்டிங் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறைய வாய்ப்பு
கட்டுப்பாடு + தீவிர டெஸ்டிங் என்ற இலக்குடன் தமிழக அரசு துரிதமாக செயல்பட தொடங்கி உள்ளது. அதிலும் சென்னையில் வீடு வீடாக கூட சோதனைகள் செய்யப்படுகிறது. இதனால் சென்னையில் போக போக கொரோனா கேஸ்கள் கட்டுக்கள் வரும் என்று கூறுகிறார்கள். இந்த தீவிரமான கட்டுப்பாடுகள் மற்றும் வேகமான சோதனை காரணமாக விரைவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று கூறுகிறார்கள். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews