கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் , அரசு தேர்வுகள் மற்றும் 10 , 12 ம் வகுப்புகள் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் சி.பி.எஸ்.இ நிர்வாகமும் தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தது.
ரத்து செய்யப்பட்ட சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கும் திட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. சி.பி.எஸ்.இ. 10, 12-ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதி முடித்தவர்களுக்கு அதனடிப்படையில் மதிப்பெண் வழங்க உள்ளதாக சி.பி.எஸ்.இ, நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 3 பாடங்களுக்கு மேல் தேர்வு எழுதியவர்களுக்கு, சராசரி கணக்கிடப்பட்டு அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் வழங்கப்படும், 3 பாடங்களுக்கு மட்டும் எழுதியவர்களுக்கு, சிறந்த 2 பாடங்களின் சராசரியை கணக்கிட்டு அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் வழங்கப்படும், 1 அல்லது 2 பாடங்களுக்கான தேர்வு எழுதியவர்களுக்கு அகமதிப்பீடு, செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.