தமிழகம் முழுவதும் மீண்டும் முழுமையாக பொதுமுடக்கம் அறிவிப்பது தொடர்பாக வரும் 29 ஆம் தேதி ஆலோசித்து அறிவிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
திருச்சிக்கு வெள்ளக்கிழமை வருகை தந்த அவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியது:வல்லரசு நாடுகளே கரோனாவை கட்டுப்படுத்த தடுமாறும் நிலையில், தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு கரோனாவை கட்டுப்படுத்தி வருகிறது. வல்லரசு நாடுகளில் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உயிர்ச் சேதம் குறைவாகவே உள்ளது. பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.மத்திய அரசு அறிவித்த பொதுமுடக்கத்தை தமிழக அரசு சரியாகப் பின்பற்றி வருகிறது. இதன்காரணமாக கரோனா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்த வேண்டுமா என்பது குறித்து வரும் 29ஆம் தேதி மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். அப்போது மருத்துவர்களின் கருத்துகளை கேட்டும், மத்திய அரசு வழிகாட்டுதலையும் கேட்டு முடிவு அறிவிக்கப்படும்.9 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன்12-ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டு கடைமடை வரை தண்ணீர் செல்வதற்காக தண்ணீர் அளவை படிப்படியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி பிரச்னையில் நல்ல தீர்வை பெற்று தந்தது அதிமுக அரசு. தமிழகம் முழுவதும் குடிமராமத்துத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. குடிமராமத்துத் திட்டம் மூலம் 24,000 ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த ஆண்டு ரூ.498 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 387.60 கோடி மதிப்பில் முக்கொம்பில் புதிய கதவணை கட்டும் பணி 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றார்.
கொரோனா தொற்று குறையாததால் ஜூன் 30-ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கபடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. நிபுணர்கள் உடனான ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை முதல்வர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 3645 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,622-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 46 பேர் இன்று மட்டும் உயிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 957-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 41-ஆயிரத்தை கடந்தது. மேலும் இன்று மட்டும் 1,358 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41,357 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே 5 முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 5-வது கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஊரடங்கு முடியும் நிலையில் ஜூலை 31 வரை போக்குவரத்து இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து வழக்கமான ரயில் போக்குவரத்து ஆக. 12 வரை கிடையாது என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.