மருத்துவ படிப்பு அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 04, 2020

Comments:0

மருத்துவ படிப்பு அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அகில இந்திய மருத்துவக் கல்வி தொகுப்பில் 50% இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மாநிலங்களால் அகில இந்திய மத்திய தோகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50% இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.அகில இந்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% ஒதுக்கீட்டை மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும் தமிழக அரசு அந்த மனுவில் குற்றம்சாட்டியுள்ளது. ஒவ்வொரு மாநிலமும், இளநிலை மருத்துவப் படிப்பில் 15% இடங்களையும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50% இடங்களையும் மத்திய அரசின் தொகுப்புக்கு ஒதுக்குகின்றன.இந்த அகில இந்திய தொகுப்பில் இருந்து 50% இடங்களை ஓபிசி, பிசி, எம்பிசி ஆகிய இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews