மயிலாடுதுறை: தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகளில் ஆள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு 1985ம் ஆண்டு தினக்கூலி பணியாளர்களாக ஆட்களை நகராட்சி நிர்வாகம் நியமனம் செய்தது. அரசாணை 125ன்படி 2001ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதியிலிருந்து தினக்கூலி பணியாளர்களின் படிப்பிற்கேற்ப அனைவரும் இளநிலை உதவியாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் பணியாளர்களுக்கு பிராவிடன்ட் பண்ட் பிடிக்கப்பட்டு அரசு ஊழியருக்களுக்கான அனைத்து சலுகைகளையும் பெற்று வந்தனர். பழைய பென்சன் பெறுவதற்கான அனைத்து அரசு ஊழியர்களை போல அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன. தற்போது அவர்கள் வருவாய் ஆய்வர், இளநிலை பொறியாளர், நகராட்சி சாலை பணியாளர்கள், நகர கட்டிட அலுவலர் என படிப்படியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
கடந்த 3 ஆண்டு காலமாக தமிழகம் முழுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக (அரசு ஆணை எண்.125 மூலம் நிரந்தரமாக்கப்பட்ட நகராட்சியில் பணியாற்றியவர்கள்) ஒவ்வொருத்தராக பணி ஓய்வு பெற்று வருகின்றனர். ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியத்திற்கு உள்ளாட்சி தணிக்கை நிர்வாகத்திற்கு விண்ணப்பம் அனுப்பியபோது அனைவரது ஓய்வூதிய விண்ணப்பமும் கடந்த ஒருசில ஆண்டுகளாக திருப்பி அனுப்பப்பட்டு விட்டது.அரசு ஆணை எண்.125) படி பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு 23.2.2006 அன்றே பணி வரன்முறை செய்யப்படவேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டிற்கு முன்பே அரசு ஆணை எண்.125ன்படி பணியில் அமர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு பணியாற்றி வந்தவர்களும் நீதிமன்றத்திற்கு சென்றவர்கள் என்று தவறான தகவலை ஒரு காரணமாகக் காட்டி உள்ளாட்சித்தணிக்கை நிர்வாகம் ஓய்வூதியத்தை அளிக்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளது சொல்லமுடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பென்சன் பெறுபவர்களுக்குதான் குடும்பத்தில் மரியாதை அல்லது ஓய்வுபெறும்போது ஒரு தொகையோடு வருபவர்களுக்குத்தான் ஓரளவிற்கு மரியாதை, இப்படி எதுவும் இல்லாமல் வெறுங்கையோடு வீட்டிற்கு சென்றவர்களின் வாழ்க்கை வீதிக்கு வந்துள்ளது.
அரசு ஆணை எண்.125ன்படி பணியில் அமர்ந்தவர்கள் ஒவ்வொரு நகராட்சியிலும் 5 பேர், 7 பேர் என தமிழகம் முழுவதும் பரவி கிடப்பதால் இவர்களுக்காக குரல் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் 2 ஆயிரம் பேரும் ஓய்வு பெற்றுவிடுவார்கள், அனைவரும் பணப்பயன் இல்லாமல் தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு சிறப்பு கவனம் எடுத்து உள்ளாட்சித் தணிக்கை அதிகாரிகள் தவறாக அளித்த தகவலை கண்டித்தும் அலட்சியத்தை போக்கி குறிப்பிட்ட அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களின் ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.