பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 14, 2020

1 Comments

பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளதால் மே மாதத்திற்கான ஊதியம் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு.தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வலியுறுத்த தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் !! 10வது கல்வியாண்டு ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் முடிந்துபோன ஒன்பது வருடங்களுக்கு மே மாத சம்பளம் கூட பகுதிநேர ஆசிரியர்களுக்கு, அரசு கொடுக்க முன்வராதது வேதனையிலும் வேதனை. இதனால் ஒவ்வொருவரும் ₹58000 இழந்து தவிக்கிறோம். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அவரால் மட்டுமே சாத்தியம் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : படித்து பட்டம் பெற்று ஆசிரியர் பணி கிடைக்காமல் வறுமையில் வாழும் உடற்கல்வி, ஓவியம், கணினிஅறிவியல், இசை, தையல், தோட்டகலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி ஆகிய பட்டதாரிகள் நிலையறிந்து அவர்களை பகுதிநேர ஆசிரியர்களாக தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரிய உத்தரவிட்டதுடன் 16549 ஆசிரியர்களையும் பணிநியமனம் செய்தவர் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாதான். கடந்த 2011 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதியன்று சட்டப்பேரவை விதி 110-படி, ஆண்டு முழுவதும் ஊதியம் பெறும் வகையில் 99 கோடியே 29 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனாலும் 5000 ரூபாய் தொகுப்பூதியம் என்ற நிலையில் அவர்களுக்கு உடனே ஊதியம் வழங்கப்படவில்லை. தொடர்ந்து ஏப்ரல் மாதமும் பணி செய்திருந்த போதிலும் அம்மாதத்திற்கான ஊதியமும் வழங்கப்படவில்லை. பின்னர் வந்த மே மாதம் பள்ளி முழுஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறையும் சென்று விட்டது. ஆனால் மாத ஊதியம் குறித்து தகவல் எதுவுமே தெரியவில்லை. அடுத்த கல்வியாண்டும் பின்னர் துவங்கிவிட்டது. ஜூன் மாதம் பள்ளிதொடங்கியதும் வேலைக்கு சேர்ந்த 4வது மாதத்தில்தான் முதன்முதலில் வழங்கப்பட்ட ஊதியத்தில் மே மாதம் தவிர மார்ச், ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது. இதுவே சிக்கலுக்கு முதல் காரணம். இப்படி முதல் முறை விடுபட்ட 2012 ஆம் ஆண்டிற்கான மே மாத ஊதியம் இதுவரை கடந்த 9 வருடமாக வழங்கப்படவில்லை என்பது தான் வேதனை. இதனால் ஒவ்வொருவருக்கும் 58 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 10வது கல்வி ஆண்டில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 9 வருடங்களாக வழங்கப்படாத மே மாத ஊதியத்தை வழங்கிட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு உறுதுணையாக இருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டுமா? பணிநிரந்தரம் கேட்கும் நேரத்தில், தராமல் விடுபட்ட சம்பளத்தை கேட்கும் நிலையில் தள்ளியது வேதனை இல்லையா?. ஆட்சியாளர்களே எங்கள் கோரிக்கைகளை, அரசு சிறுதும் கவனம் செலுத்துவதில்லை என்ற எங்களின் மனக்குமுறலை எப்போது கவனம் செலுத்துவீர்கள்?. 16549 பகுதிநேர ஆசிரியர்களில் தற்போதுள்ள 12ஆயிரம் பேருக்கு, இன்றைய நிலையில் தரப்படும் ₹7700 சம்பளம் வாழ்வாதாரத்தை மீட்குமா. 10 ஆண்டுகளில் எங்களின் நிலையை உயர்த்த அரசு என்ன முயற்சி எடுத்துள்ளது? அரசை நம்பி வந்த எங்களை அனாதை ஆக்கி விடாதீர்கள். முதலில் 9 ஆண்டாக தொடர்ந்து மறுக்கப்படும் மே மாதம் சம்பளத்தை வழங்க முதல்வர் உத்தரவு பிறபிக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார் . தொடர்புக்கு :- சி.செந்தில்குமார் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு செல் : 9487257203 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. நிங்களாவது பரவாயில்லை. கல்லூரியில் பணி புரியும் கணினி பயிற்சி கெளரவ விரிவுரையாளர்களுக்கு 15ஆண்டுகளாக 4000 சம்பளம் கொடுத்து வருகின்றது இந்த அரசு இது எவ்வளவு பெரிய இழிவான செயல்...

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews