M.Phil/Ph.D ஆய்வறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் ஓராண்டு நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 08, 2020

1 Comments

M.Phil/Ph.D ஆய்வறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் ஓராண்டு நீட்டிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு எம்.பில் மற்றும் பி.எச்.டி முடிக்காமல் உள்ளவர்களுக்கு ஒரு ஆண்டு, கால அவகாசம் நீட்டிப்பு - உயர்கல்வித்துறை M.Phil., Ph.D., அவகாசம் முடிவுற்ற மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம்
M.Phil., Ph.D., அவகாசம் முடிவுற்ற மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இறுதித்தேர்வு எழுத முடியாமல் உள்ள மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது Viva – Voice என்ற வாய்மொழித்தேர்வை காணொலிக்காட்சி மூலம் நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எம்ஃபில், பிஎச்டி ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை ஓராண்டு நீட்டித்து உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.ஊரடங்கு காரணமாக பிஎச்டி, எம்ஃபில் போன்ற ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கையை இறுதி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். யுஜிசி அறிவுறுத்தல் இதையடுத்து ஆராய்ச்சி மாண வர்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க குறைந்தது 6 மாதங்கள் வரை பல்கலைக்கழகங்கள் அவ காசம் தரவேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியது. அதன்படி ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை ஓராண்டுக்கு நீட் டித்து தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வித் துறைச் செயலர் அபூர்வா, அனைத்து பல்கலை. பதிவாளர் களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு கடந்த கல்வி ஆண்டுடன் (2019-20) அவகாசம் முடிந்த எம்ஃபில், பிஎச்டி மாண வர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும், தேர்வுகளை எழு தவும் ஓராண்டுக்கு காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. அதேநேரம் மாணவர்களுக் கான வாய்மொழி திறனறித் தேர்வை காணொலி காட்சி வழி யாகவே நடத்த வேண்டும். ஒரு போதும் மாணவர்களை நேரில் அழைத்து திறனறித் தேர்வை நடத்தக் கூடாது. மேலும், உயர் கல்வித் துறை சார்பாக மறு உத்தரவு வரும் வரை அனைத்து பல்கலைக் கழகங்கள், கல்லூரி கள் மூடப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. Sir will you give arts and science coliege advertisements

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews