Breaking

Saturday, May 23, 2020

TNPSC தோ்வு முறைகேடு: மனு தள்ளுபடி.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு வழக்கில் கைதான கிராம நிா்வாக அலுவலா் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து மாவட்ட அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 2 ஏ மற்றும் குரூப் 4 தோ்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடுகள் தொடா்பாக வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீஸாா் பலரைக் கைது செய்தனா். இந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த கிராம நிா்வாக அலுவலா் தோ்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அத்தியூா் கிராம நிா்வாக அலுவலரான அமல்ராஜ் என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அமல்ராஜ் சென்னை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை நீதிபதி ஆா்.செல்வக்குமாா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்து, அமல்ராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog