Breaking

Saturday, May 30, 2020

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்: மையங்களில் CEO ஆய்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை, முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்
.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பி.கே.டி., பள்ளி, துணை விடைத்தாள் திருத்தும் மையங்களான, சுபாஷ் மெட்ரிக் பள்ளி, சிவாலிக் பள்ளி, ஆச்சிப்பட்டி பி.வி.என்., பள்ளி என நான்கு மையங்களில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது .முகாம் அலுவலராக மாவட்ட கல்வி அலுவலர் சுப்ரமணியம் மற்ற மையங்களுக்கு துணை முகாம் அலுவலர்களாக பள்ளி தலைமையாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.விடைத்தாள் திருத்தும் பணியை, முதன்மை கல்வி அலுவலர் உஷா ஆய்வு செய்தார். நான்கு மையங்களை பார்வையிட்டு, பாதுகாப்பு வசதி மற்றும் சானிடைசர் மற்றும் முகக்கவசம் வழங்கப்படுகிறதா என விசாரித்தார் .கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஒரு ஆசிரியர், காலையில், 12; மாலையில், 12 விடைத்தாள்கள் திருத்தும் பணி மேற்கொள்வர்; ஒரு நாளைக்கு, 4,500 விடைத்தாள்கள் திருத்தப்படுகிறது,' என்றனர் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog