பண்ருட்டியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஜிப்மர் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கும், அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஜிப்மரில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலர் வேண்டுமென்றே ஒரு குழப்பத்தை உருவாக்கி ஜிப்மர் மருத்துவமனையில் இருக்கின்ற மூவரும் புதுச்சேரிக்கு சம்மந்தமானவர்கள் என்று தவறான வதந்தியை பரப்பி வருகின்றனர்.
திரும்பி வர விருப்பம் வெளி மாநிலத்துக்கு சென்ற தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள், தொழில் நிமித்தமாக சென்றவர்கள் சொந்த மாநிலத்துக்கு செல்ல வேண்டும் என்றால், அவர்கள் தங்கியுள்ள மாநிலத்தின் உத்தரவோடு அவர்களை அழைத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசின் ஒரு உத்தரவு வந்துள்ளது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலம் சென்றவர்கள் திரும்பி வர வேண்டும் என்று விரும்புகின்றனர்.
அவர்களும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றனர். அதற்கான போர்ட்டெல் ஒன்றை இன்று ஆரம்பிக்க உள்ளோம். வெளிமாநிலத்தில் இருப்பவர்கள் வாகனங்களில் வருவது சிரமம் என்பதால், சமூக இடைவெளியை கடைபிடித்து வர ரயில் சேவையை துவக்க வேண்டும் என்று பிரதமருக்கு அவசர கடிதம் எழுதியுள்ளேன். இதேபோல் ராஜஸ்தான், பஞ்சாப், கேரள மாநில முதல்வர்களும் எழுதியுள்ளனர். இதற்கு பிரதமர் விரைவில் முடிவெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
விழுப்புரம், கடலூர்
பக்கத்து மாவட்டங்களான விழுப்புரம், கடலூரில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருப்பதால் ரெட் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே நாம்முடைய மாநிலத்தில் கொரோனா தொற்று இல்லை என்று கூறிக்கொண்டு விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருக்கக்கூடாது. இது பழைய காலம் அல்ல. குறைந்த பட்சம் 2 ஆண்டுகளுக்கு முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டிய நிலை இப்போது இருக்கிறது. சமூக இடைவெளியை கடைபிடிப்பதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
எதுவும் தெரியாது
3 ம் தேதிக்கு பிறகு மத்திய அரசு எந்தளவுக்கு நமக்கு விதிமுறைகளை தளர்த்தபோகிறார்கள் என்பது தெரியவில்லை. ஒருபுறம் மக்களின் உயிருக்கு பாதிகாப்பு தேவை. மறொருபுறம் மாநிலத்தில் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள், வணிக நிறுவனங்கள் மூடியிருப்பதால் வருமானம் இல்லை. பல மாநிலங்கள் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை குறைத்தும், 30 சதவீதம் பிடித்தம் செய்தும் வழங்கும் நிலையில், கடுமையான நிதிநெருக்கடி இருந்தாலும் நாம் முழுமையான மார்ச், ஏப்ரல் மாத ஊதியத்தை அரசு ஊழியர்களுக்கு கொடுத்துள்ளோம்.
ஆனால் இனிவரும் காலங்களில் வருவாயை பெருக்க முடியவில்லை என்றால், கொரோனா தொற்று பெரிய அளவில் பாதிக்கப்பட்டால் நம்முடைய மாநிலத்திலும் அரசு ஊழியர்கள் சில தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும். இப்படி செய்தால்தான் மாநில மக்களின் நல்வாழ்வு திட்டங்களை நிறைவேற்ற முடியும். ஒருசாரார் சம்பாதிக்கும் சமையத்தில் மற்றொரு சாரார் பட்டினியால் வாடுவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இடைவெளி அவசியம்
ஆகவே எல்லா தியாகத்துக்கும் அனைத்து தரப்பு மக்களும் தயாராக இருக்க வேண்டும். வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று இன்னும் ஓராண்டுகாலம் படிப்படியாக வரும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆகவே மருந்து கண்டுபிடிக்கும் வரை வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து நடக்க வேண்டுமென முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.