👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'தினமலர்' மற்றும் 'அமிர்தா விஸ்வ வித்யாபீடம்' இணைந்து வழங்கும், 'ஆன்லைன் வழிகாட்டி' நிகழ்ச்சியில், இன்று சைபர் செக்யூரிட்டி, கலை, அறிவியல் மற்றும் மரைன் கேட்டரிங் ஆகிய துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து, துறை சார்ந்த நிபுணர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், தேசிய அளவில் உள்ள சிறந்த மத்திய உயர்கல்வி நிறுவனங்கள், அட்மிஷன் நடைமுறைகள், உதவித்தொகை வாய்ப்புகள், பல்வேறு முக்கிய நுழைவுத்தேர்வுகள் குறித்து, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் நேற்று விளக்கமளித்தார். தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து, எச்.சி.எல்., நிறுவன துணை தலைவர் சுப்பராமன் மற்றும் பி.காம் ஹானர்ஸ், ஏ.சி.சி.ஏ., படிப்புகள் குறித்து, கல்வியாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் விரிவாக விளக்கினர்.
வரும், 17ம் தேதி வரை, தினமும் காலை, 10:00 முதல், 12:00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், இன்று சைபர் செக்யூரிட்டி துறை வாய்ப்புகள் குறித்து, துறை சார்ந்த வல்லுனர் சையத் முகமது, கலை அறிவியல் படிப்புகள் குறித்து, கல்வி ஆலோசகர் மாறன் விளக்கம் அளிக்கிறார். மரைன் கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட் குறித்து, சுரேஷ் குமார் மாணவர்களது சந்தேகங்களுக்கு, நேரலையில் விளக்கம் அளிக்கிறார்.
இதில் பங்குபெற
www.kalvimalar.com இணையதளத்தில், பெயர், மொபைல் எண், இ- - மெயில் முகவரி மற்றும் மாவட்டம் ஆகிய தகவல்களை அளித்து உடனே பதிவு செய்யலாம். இந்நிகழ்ச்சியில், 'எச்.சி.எல்., டெக்னாலஜிஸ், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள்' ஆகியவை பவர்டு பை ஸ்பான்சர்களாக பங்கேற்கின்றனர்.
'வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி அண்டு அட்வான்ஸ்டு ஸ்டடீஸ், ஸ்ரீ சாய்ராம் கல்வி நிறுவனங்கள், இ-பாக்ஸ் காலேஜஸ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங்' ஆகிய நிறுவனங்கள் உடன் வழங்குகின்றன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.