பள்ளிகளுக்கான உபகரணங்கள் வாங்குவதில் தொடரும் அவலம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 07, 2020

Comments:0

பள்ளிகளுக்கான உபகரணங்கள் வாங்குவதில் தொடரும் அவலம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு பள்ளிகளுக்கு வழங்கப் பட்ட விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் தரமற்றவையாக இருப்பதாக , தலைமை ஆசிரியர்கள் குமுறி வரு கின்ற னர் . தமிழகத்தில் 24 , 321 அரசு தொடக்கப்பள்ளிகள் , 6 , 966 அரசு நடுநிலைப்பள்ளிகள் உள்ளன . அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டு திறனை மேம்படுத்திட ஆண்டுதோ றும் ரூ . 10 ஆயிரம் மதிப்பில் கைப்பந்து , வலைப்பந்து , கிரிக்கெட் பேட் உள் ளிட்ட சாதனங்கள் வாங்கி கொள்ள அனுமதி உள்ளது .
அதேபோல் ஆங்கில மொழியறிவு , திறனறிவு உள்ளிட்டவைகளை வளர்த்துக் கொள்ள ரூ . 5 ஆயிரமும் , சுற்றுச்சூழலை மேம்படுத்திட , மரம் வளர்த்தல் உள்ளிட்ட சமூக ஆர்வத்தை ஏற்படுத்த , நீதிநூல்கள் வாங்கிநூலகம் ஏற்படுத்த ரூ . 15 ஆயிரமும் வழங்கப்படுகிறது . கடந்தாண்டு விளை யாட்டு உபகரணங்களை வழங்கிய நிறுவனத்தின் பொருட்கள் அனைத்தும் தரமற்றதாக இருந்துள் ளது . அதே நிறுவனமே தற்போதும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிட பள்ளி வங்கிக்கணக்கில் இருந்து பணம் பெறுவதற்கு முயற்சித்துள்ளது . இதற்கு தலைமை ஆசிரியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர் . விஷயம் கேள் விப்பட்ட அந்த நிறுவனம் கல்வித்துறையில் உள்ள உயர் அதிகாரிகளின் மூலம் அழுத்தம் கொடுத்து , அந்த நிறுவனத்திற்கான ' செக் ' கை பெற்றுக் கொண்டுள்ள தாம் . ஆசியர்களிடையே இது அதிருப்தியை ஏற்ப டுத்தி இருக்கிறது .
இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறும் போது , “ கல்வித்துறைக்கு வாங்கப்படும் பொருட்கள் அனைத்தையும் முதல்வ ரின் மாவட்டமான சேலத் தில் உள்ள ஒரு நிறுவனம் சப்ளை செய்கிறது . விளை யாட்டு பொருட்கள் பெரும் பாலும் தரமற்றவை . ரூ . 4 ஆயிரம் பெறுமானமுள்ள அந்த பொருட்களுக்கு ரூ . 10 ஆயிரம் ' செக் ' வாங்கு கிறார்கள் . மொழியறிவை வளர்க்க கொடுத்துள்ள பயிற்சி அட்டைகள் எளி தில் சேதமடையக்கூடிய வையாக உள்ளன . இதற்கு ரூ . 5 ஆயிரமும் , பள்ளி நூலகங்களுக்கு வழங்கப் பட்டுள்ள புத்தகங்களுக்கு ரூ . 15 ஆயிரமும் வழங்குமாறு கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்ற னர் . இவற்றின் மொத்த விலை ரூ . 10 ஆயிரத்தை தாண்டாது . ஆனால் பள்ளி வங்கிக்கணக்கில் இருந்து ரூ . 35 ஆயிரத்திற்கு ' செக் ' வழங்கப்பட்டுள் ளது . சேலத்தைச் சேர்ந்த அந்த நிறுவனம் , தமிழகம் முழுவதும் இந்த பொருட் களை சப்ளை செய்வதன் மூலம் பல கோடிகளை சம் பாதிக்கிறது . இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் சிலர்தட்டிக்கேட்டபோது , மாவட்டம் விட்டு மாவட் டம் இடமாறுதல் வரும் என் றும் மிரட்டப்படுகிறார்கள் ” என்றனர் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews