134 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6,500 படுக்கையுடன் கொரோனா தனிமை வார்டுகள். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 04, 2020

Comments:0

134 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6,500 படுக்கையுடன் கொரோனா தனிமை வார்டுகள்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா தொற்று உள்ளவர்களின் உறவினர்களை கண்காணிக்க சென்னையில் உள்ள 800 பள்ளிகளில் தனிமை வார்டு அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 134 பள்ளிகளில் 6,500 படுக்கைகள் கொண்ட தனிமை வார்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி 100க்கும் மேற்பட்டவர்களுக்கு சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால், சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இட வசதி இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதை சமாளிக்க சென்னையில் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் அந்த நோயாளிகளை அனுமதிக்கும் வகையில் கூடுதல் படுக்கை வசதியுடன் சிறப்பு வார்டுகள் தயாராகி வருகிறது. மேலும், நோய் தொற்று உள்ளவர்களின் உறவினர்களை கண்காணிக்க சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தனிமை வார்டுகள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை ஐஐடி, அண்ணா பல்கலை, லயோலா கல்லூரி, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி உட்பட 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 25 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய தனிமை வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றிலும் தனிமை வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக, 800க்கும் மேற்பட்ட பள்ளிகளை சென்னை மாநகராட்சி கண்டறிந்துள்ளது. இதில், முதற்கட்டமாக 134 பள்ளிகளில் 6,500க்கு மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் தனிமை வார்டுகள் அமைக்கப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில் 281 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இதில் 32 மேல்நிலை பள்ளிகள், 38 உயர்நிலை பள்ளிகள், 92 நடுநிலை பள்ளிகள், 119 தொடக்க பள்ளிகள். இதை தவிர்த்து, 400க்கும் தனியார் மேற்பட்ட பள்ளிகள் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை சேர்த்து 800 பள்ளிகள் சென்னை மாநகராட்சி வசம் உள்ளன.
இதில், முதல்கட்டமாக பாதிப்பு அதிகம் உள்ள திருவிக நகர், தண்டையார்பேட்டை, ராயபுரம், அண்ணாநகர், தேனாம்ேபட்டை, அடையாறு மண்டலங்களில் தனிமை வார்டு அமைக்கப்படுகிறது. இதற்காக 134 பள்ளிகளில் 1,500 அறைகள் தேர்வு செய்யப்பட்டு, அதில், 6,500 படுக்கைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 21 பள்ளிகளில் உள்ள 51 அறைகளில் 2 ஆயிரம் படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை சுற்றியுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் மற்றும் அறைகள் அதிகமாக உள்ள பள்ளிகள் கண்டறியப்பட்டு, அந்த பள்ளிகளில் தனிமை வார்டுகள் அமைக்கப்படும். ஒரு பள்ளி அறைக்கு 4 படுக்கைகள் அமைக்கப்படுகிறது. இதன்படி பார்த்தால் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமானால் படிப்படியாக அனைத்து பள்ளிகளும் தனிமை வார்டுகளாக மாற்றப்படும். இதற்காக அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews