கொரோனா சிகிச்சைக்காக 10 கல்லூரிகளை சிறப்பு வார்டாக மாற்ற உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 04, 2020

Comments:0

கொரோனா சிகிச்சைக்காக 10 கல்லூரிகளை சிறப்பு வார்டாக மாற்ற உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அட்மிட்டாகி வருகின்றனர். இதை தவிர்த்து திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். சென்னையில் உள்ள 4 மருத்துவமனைகளில் 1700 படுக்கைகள் மட்டும் கொரோனா நோயாளிகளுக்காக அளிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரியில் 500 படுக்கைகளும், ராஜிவ்காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் தலா 400 படுக்கைகளும் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை இவற்றில் 1190 பேர் சிகிச்சை பெற்றுவருவதால் 500 படுக்கைகள் மட்டும் மீதமுள்ளது. எனவே சென்னையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கல்லூரிகள், பள்ளிகள், திருமண மண்டபம் ஆகியவற்றை தயார் செய்யும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. இதற்காக 100க்கும் மேற்ப்பட்ட கல்லூரிகள், 800க்கும் மேற்பட்ட பள்ளிகள், 500க்கும் மேற்ப்பட்ட திருமண மண்டபங்களை மாநகராட்சி தயார் நிலையில் வைத்துள்ளது. இவற்றில் முதல் கட்டமாக 10 கல்லூரிகள் மற்றும் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தை பயன்படுத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு, 120 படுக்கைகள் கொண்ட வேப்பேரி கால்நடை மருத்துவக்கல்லூரியும் மற்றும் 400 படுக்கைகள் கொண்ட மீனாட்சி பொறியியல் கல்லூரியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவக்கல்லூரிக்கு 300 படுக்கைகள் கொண்ட வேலம்மாள் பொறியியல் கல்லூரியும், 120 படுக்கைகள் கொண்ட டி.சி.வைஷ்ணவகல்லூரியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரிக்கு 160 படுக்கைகள் கொண்ட ஆச்சி நர்சிங் கல்லூரியும், 124 படுக்கைகள் கொண்ட மீனாட்சி பல் மருத்துவக்கல்லூரியும், 275 படுக்கைகள் ெகாண்ட என்.எஸ்.ஐ.டி கல்லூரியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைப்போன்று ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனைக்கு 250 படுக்கைகள் கொண்ட லயோலா கல்லூரியும், 100 படுக்கைகள் கொண்ட ஸ்ெடல்லா மேரிஸ் கல்லூரியும், 100 படுக்கைகள் கொண்ட எஸ்.ஆர்.எம். மருத்துவமனையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதை தவிர்த்து கூடுதலாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 550 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள மையத்தையும் பயன்படுத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இந்த 10 கல்லூரிகள் மற்றும் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தையும் சேர்த்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவக்கல்லூரியின் முதல்வர்கள் தங்களது மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரிகளை உடனடியாக ஆய்வு செய்து அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளதா? என்று அறிக்கை அளிக்க மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு உத்தரவிட்டுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews