குறைந்த வட்டியில் கடன் - SBI வங்கியின் அதிரடி,..கடன் திட்டங்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 30, 2020

Comments:0

குறைந்த வட்டியில் கடன் - SBI வங்கியின் அதிரடி,..கடன் திட்டங்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நம் பலருக்கும் , ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். சொந்த வீடு இல்லையா , என நம்மிடம் கேட்பவர்கள் ஏராளம். நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக் கனவை நினைவாக்க ஒரே வழி வீட்டுக் கடன் தான். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தற்போது செம குறைவான வட்டி விகிதத்துக்கு வீட்டுக் கடன் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
மத்திய ரிசர்வ் வங்கி, கடந்த மார்ச் 27 அன்று 0.75 சதவிகிதம் தன் ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்தது. ரெப்போ வட்டி விகிதங்களைக் குறைத்ததால், வீட்டுக் கடன் வட்டி விகிதங்களும் சரமாரியாக குறைந்து இருக்கின்றன. எஸ்பிஐ வங்கியின் இ பி ஆர் (EBR - external benchmark based rate) 7.05 சதவிகிதமாக இருக்கிறது. அதோடு 0.15 சதவிகித வட்டியை பிரீமியம் என்கிற பெயரில் வைப்பார்களாம். ஆக மொத்தம் 7.05 + 0.15 = 7.20 சதவிகித வட்டிக்கு, 30 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் வாங்கலாம். இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். எஸ்பிஐ வங்கியின் இ பி ஆர் (EBR - external benchmark based rate) 7.05 சதவிகிதமாக இருக்கிறது. அதோடு 0.40 சதவிகித வட்டியை பிரீமியம் என்கிற பெயரில் வைப்பார்களாம். ஆக மொத்தம் 7.05 + 0.40 = 7.45 சதவிகித வட்டிக்கு, 30 - 75 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் வாங்கலாம். இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
வங்கியின் இ பி ஆர் (EBR - external benchmark based rate) 7.05 சதவிகிதத்துடன் 0.50 சதவிகித வட்டியை பிரீமியம் என்கிற பெயரில் வைப்பார்களாம். ஆக மொத்தம் 7.05 + 0.50 = 7.55 சதவிகித வட்டிக்கு, 75 லட்சம் ரூபாய்க்கு மேல் வீட்டுக் கடன் வாங்கலாம். இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். சம்பளம் வாங்காதவர்கள், இந்த எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கு, அவர்கள் வாங்கும் கடன் அளவு பொருத்து மேலே சொன்னது போல வட்டி விகிதங்களைக் கணக்கிடுவார்கள்.
அதோடு கூடுதலாக ஒரு 0.15 சதவிகிதம் வட்டி பிரீமியமாக வைப்பார்களாம். எனவே சம்பளம் வாங்குபவர்களை விட, சம்பளம் வாங்காதவர்கள் 0.15 % கூடுதலாக வட்டி செலுத்த வேண்டி இருக்கும். பெண்கள் இந்த வீட்டுக் கடன் வாங்கும் திட்டத்தில் கடன் வாங்க வந்தால், மேலே சொன்ன அனைத்து திட்டங்களில் இருந்தும் 0.05 சதவிகிதம் வட்டி குறைத்து கொடுக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம்.
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI)தன் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டிக்கு அவசர கடன் வழங்கும் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. கடனுக்கான வட்டி 7.25% என்றும், அதற்கான தவணை 6 மாதங்களுக்குப் பின்னரே தொடங்கும் எனவும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் Yono App என்ற செயலியைப் பதிவிறக்கும் செய்து, வீட்டிலிருந்தவாறே 45 நிமிடங்களுக்குள் இந்தக் கடன் தொகையைப் பெற்று விடலாம் என்று கூறப்படுகிறது. முதலில் வாடிக்கையாளர்கள் 567676 என்ற எண்ணுக்கு PAPL என SMS செய்ய வேண்டும். அதற்கு வரும் பதிலில், இந்த அவசரக் கடனைப் பெறத் தகுதி உண்டா இல்லையா என அறிவிப்பு வரும்.
தகுதி இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் Yono செயலியை பதிவிறக்கம் செய்து தங்கள் கணக்கில் நுழைய வேண்டும். பின்னர் கடன் தொகை, கால அளவு ஆகியவற்றை உள்ளிட வேண்டும். அதன்பிறகு மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை செயலியில் பதிவிட்டதும் வங்கி கணக்கிற்கு கடன் தொகை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews