B.Com குரூப் படிக்கலாமா? எதிர்காலம் எப்படி இருக்கும்..?? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 11, 2020

Comments:0

B.Com குரூப் படிக்கலாமா? எதிர்காலம் எப்படி இருக்கும்..??

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
What After 12th: உண்மையில் பி.காம் படிக்கலாமா, அது ஈஸியாக இருக்குமா, வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கும் ?
‘நான் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விட்டேன். தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறேன். அடுத்தாக பி.காம் படிக்கலாம் என்று இருக்கிறேன். எனது நண்பர்களும் பி.காமில் சேருவதாக உள்ளார்கள். பி.காம் படித்தால் நல்ல எதிர்காலம் இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். உண்மையில் பி.காம் படிக்கலாமா, அது ஈஸியாக இருக்குமா, வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்’. - வேல்முருகன், அரியலூர்
நல்ல கல்லூரி
பி.காம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு விட்டீர்கள். முடிவு செய்து விட்டீர்கள். அப்படியென்றால் தாராளமாக பி.காம் சேரலாம். ஆனால், எந்த படிப்பாக இருந்தாலும், நாம் சேரும் கல்லூரி, நல்ல தரம் வாய்ந்த கல்லூரியா என்பதை சிந்திக்க வேண்டும். வீட்டுக்கு அருகில் கல்லூரி உள்ளது என்பதற்காக உடனே சேர்ந்து விடக்கூடாது. அடுத்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு எப்படி இருக்கும் என்பதை சிந்தித்து, நல்ல கல்லூரியில் சேருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரையில், சென்னை லயோலா கல்லூரி, குருநானக் கல்லூரி, கோவை பிஎஸ்ஜி கல்லூரிகளில் பி.காம் படிப்பு வழங்குவதில் முன்னனி கல்வி நிறுவனங்களாக உள்ளன.
பி.காமில் என்னென்ன பாடங்கள் இருக்கும்
பி.காம் என்பது இளநிலை வணிகவியல் ஆகும். இதில் அக்கவுண்டிங், மார்க்கெட்டிங், ஆடிட்டிங், காஸ்டிங், மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங், ஃபைனான்சியல் அக்கவுண்டிங், பிஸ்னஸ் லா உள்ளிட்ட பல்வேறு பாடங்கள் படிக்க வேண்டியிருக்கும். இத்தகைய பாடங்களை படித்தால் டிகிரி முடித்தவிடலாம் என்று எண்ணக்கூடாது. ஏற்கனவே கூறியபடி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்காலத் தேவை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து, கூடுதலாக சில படிப்புகளையும் படிக்க வேண்டும்.
கணினி பயன்பாடு
உதாரணத்திற்கு பி.காம் படிக்கும் போதே, Coding Skills, Algorithm போன்றவை படிக்க வேண்டும். கோடிங் ஸ்கில்ஸ் எனும் போது C Program, C++, Python போன்ற கணினி தொழில்நுட்ப பிரிவுகளையும் படிக்க வேண்டும். ஏனென்றால், எதிர்காலத்தில் வணிகவியல் துறை பெரும்பாலும் கணினி பயன்பாட்டு கொண்டவையாக இருக்கும். Business Analytics, Financial Technology, Business Management போன்ற பலவற்றிருக்கும் கணினி அறிவு தேவைப்படும். எனவே, மேற்கண்ட கூடுதல் படிப்பகளையும் நீங்கள் தெரிந்து கொண்டால், அதிகமான சம்பளத்தில், நல்ல நிறுவனத்தில், நல்ல வேலை பெற முடியும்.

பி.காம் மட்டும் இல்லை:
முன்பு மட்டும் தான் பி.காம் ஜெனரலாக இருந்தது. அதாவது பி.காம் ஒரே ஒரு பட்டப்படிப்பாக இருந்தது. ஆனால், தற்போது பி.காம் படிப்பிலேயே பல பிரிவுகள் உள்ளது. B.Com Information Technology, B.Com Bank Management, B.Com Computer Application, B.Com ISM, B.Com Capital Market என பல படிப்புகள், பல்வேறு கல்வி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
பி.காம் படிக்கும் போதே வேறு என்ன செய்யலாம்?
பெரும்பாலான மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்த பிறகு முதல் இரண்டு ஆண்டுகள் அசால்ட்டாக இருப்பார்கள். மூன்றாமாண்டு வந்த பிறகு தான் போட்டித்தேர்வுகளுக்கும், மேற்படிப்புகளுக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் தயாராவார்கள். நீங்கள் அது போல் இல்லாமல், முதலாமாண்டு முதலே கிடைக்கும் நேரத்தை பயன்படுத்த வேண்டும். பொதுவாக வங்கித்தேர்வுகள், டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, காவலர் பணி தேர்வு போன்ற போட்டித்தேர்வுகளுக்கு தயாராகலாம். அல்லது மேற்கொண்டு முதுநிலை படிப்புகள் சேருவதற்கு நுழைவுத்தேர்வுக்கு தயாராகலாம். அல்லது கணினி தொழில்நுட்பம் சார்ந்த பகுதி நேர டிப்ளமோ படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம்.
​பி.காம் முடித்த பிறகு எம்.காம் படிக்கலாமா?
பி.காம் முடித்த பிறகு எம்.காம் மட்டும் இல்லை. வணிகவியல் சார்ந்து பல்வேறு முதுநிலைப் படிப்புகள் உள்ளன. MSW, MCS, MHR, MFT, MID, MMM என பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன. இதை தவிர எம்.காம் எக்னாமிக்ஸ், எம்ஏ எக்னாமிக்ஸ், எம்பிஏ போன்ற முதுநிலை படிப்புகளிலும் சேரலாம். அல்லது வேறு துறைகளிலும் சேர முடியும். இதழியல், தொடர்பியல், காட்சி தொடர்பியல் போன்றவற்றில் சேரலாம்.
பி.காம் முடித்தப்பின் நுழைவுத்தேர்வுகள் என்ன உள்ளது?
பி.காம் முடித்தப்பின்பு, மேற்கொண்டு படிப்பதற்கு பல்வேறு நுழைவுத்தேர்வுகளும் நடத்தப்படுகிறது. CAT (Common Admission Test), IIFT (Indian Institute of Foreign Trade), CMAT (Common Management Admission Test), CET (Common Entrance Test), SNAP(Symbiosis National Aptitude Test) போன்றவை ஆகும். பி.காமில் சேர்ந்த பிறகு முதலாமாண்டு முதலே இந்த தேர்வுகளுக்கு தயார் செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு, கடைசி நேரத்தில் தேர்வுக்கு தயாராக கூடாது.
எந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உண்டு?
எந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உண்டு? ஆடிட்டிங், தகவல் தொடர்பியல், பிபிஓ, கேபிஓ, வங்கித்துறைகள் போன்ற பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். இத்தகைய துறைகளில் அக்கவுண்ட்ஸ் மேனேஜர், ஆடிட்டர், ஃபைனான்ஸ் மேனஜர், ப்ராஜெக்ட் மேனேஜர், இவண்ட் மேனேஜர் என உயர்பதவி வகிக்க முடியும். மேலும், இதில் கிடைக்கும் அனுபவங்களை கொண்டு சொந்தமாக தொழில் நிறுவனத்தையும் தொடங்க முடியும்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews