தமிழகத்தில் ஊராடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 11, 2020

Comments:0

தமிழகத்தில் ஊராடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அனைத்து மாநில முதல்வர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பது குறித்தும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு பணி, தமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலவரம் குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
நாடு தழுவிய அளவில் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவிக்க வாய்ப்பு. பிரதமரின் முடிவை தமிழக அரசு நடைமுறைப்படுத்த அமைச்சரவையில் முடிவு. ஊரடங்கை கடைபிடித்த தமிழக மக்களுக்கு அமைச்சரவை பாராட்டு. காவலர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு அமைச்சரவை நன்றி. கொரோனா சோதனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் நம்மிடம் உள்ளது. கொரோனா கண்காணிப்பில் 47056 நபர்கள் உள்ளனர். தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 969 ஆக உயர்வு*
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews