12 ஆம் வகுப்பு முடித்த பிறகு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கலாமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 04, 2020

Comments:0

12 ஆம் வகுப்பு முடித்த பிறகு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கலாமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா? நான்கு வருடங்கள் கழித்து படித்து முடித்து வெளியே வரும் போது எப்படி இருக்கும்?’ -சரவணண், சென்னை

இன்ஜினியரிங் சேரலமா?
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பெரும்பாலான மாணவர்களுக்கு இன்ஜினியரிங் சேரலமா அல்லது வேறு கலை, அறிவியல் படிப்புகளில் சேரலமா என்ற சந்தேகம் இருக்கும். அதிலும், இன்ஜினியரிங் என்றால், மற்ற பிரிவுகளைக் காட்டிலும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறைக்கு மவுசு அதிகம். ஆனால், நான்கு ஆண்டுகள் கழித்து, மெக்கானிக்கல் இன்ஜினியர் எல்லோரும் வெற்றி பெற்றுள்ளார்களா என்றால் அது கேள்விகுறி தான். இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அந்த வகையில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையை தேர்வு செய்யலாமா, அதில் சேர்ந்த பிறகு என்ன செய்ய வேண்டும், எந்த மாதிரியான பாடங்கள் வரும் என்பது பற்றி இங்கு காணலாம்.
பன்னிரண்டாம் வகுப்பில்:
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் தேர்வு செய்வதற்கு முன்பு சில விஷயங்களை சிந்தித்து பார்க்க வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பபில் கணிதம் மற்றும் இயற்பியில் அதிக ஆர்வத்துடன் படித்திருக்க வேண்டும். சாதாரணமாக மதிப்பெண்ணுக்காக படிக்காமல், பாடங்களை புரிந்திருக்க வேண்டும். மேலும், மெக்கானிக்கல் சம்பந்தபட்ட விஷயங்களை அதிக ஆர்வம் இருக்க வேண்டும். நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் பெற்றிருக்க வேண்டும்.
நான்கு ஆண்டுகள் கழித்து:
அதே போல், நான்கு ஆண்டுகள் கழித்து மெக்கானிக்கல் தொழில்துறை எப்படி இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். அப்போது என்ன மாதிரியான தொழில்நுட்பங்கள் வருமோ, அவை நீங்கள் சேரும் கல்லூரியில் இருக்க வேண்டும். உதாரணமாக எதிர்காலத்தில், மின்சார கார் தான் அதிகளவில் பயன்பாட்டில் இருக்கும். அப்படியென்றால், நீங்கள் சேரும் கல்லூரியில் அந்த அளவுக்கு அட்வான்ஸ் தொழில்நுட்பங்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த தொழில்நுட்ப திறமைகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
என்னென்ன பாடங்கள் இருக்கும்:
அடிப்படையில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்திட்டத்தில் சில முக்கிய பாடங்கள் உள்ளது. அவை, Fluid Mechanics. Manufacturing Technology, Thermodynamics, Systems, dynamics and control, Materials Laboratory, Engineering Graphics, Engineering Graphics, Automobile Engineering, CAD/CAM, Nanotechnology Power Plant Engineering, Mechatronics, Robotics போன்ற பாடங்கள் உள்ளன. இது தவிர ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் ஏற்ப மேம்பட்ட பாடங்களும் கற்றுத்தரப்படுகிறது.
வேறு மொழிகளும் கற்றுக்கொள்ள வேண்டும்:
இன்ஜினியரிங் துறையில் சேர்ந்த பிறகு முக்கியமான விஷயம் ஆங்கிலம் தவிர குறைந்தது இரண்டு புதிய மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். மெக்கானிக்கல் துறையை பொறுத்தவரையில் ஜெர்மனி, அமெரிக்க நாடுகள் முன்னனியில் உள்ளன. எனவே, ஜெர்மன் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு வேறு மொழிகளை கற்றுக் கொள்வதற்காக தனி கோச்சிங் சென்டர் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த மொழி சம்பந்தப்பட்ட டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்களை பார்த்து, அதன்படி உச்சரித்து வந்தாலே போதுமானது.
பெண்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கலாமா:
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் பெண்களுக்கு வேலை இல்லை என்ற மாயை நிலவி வருகிறது. ஆனால், உண்மையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தனியார்த்துறை நிறுவனங்களில் பெண்கள் அதிகளவில் பொறுப்பு வகிக்கின்றனர். எனவே, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் பெண்கள் தாரளமாக படிக்கலாம்.
படிக்கும் போதே நுழைவுத்தேர்வுக்கு தயாராக வேண்டும்:
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பதற்காக கல்லூரியில் சேர்ந்த பிறகு, பாடங்களை மட்டும் படிக்கக்கூடாது. கேட் தேர்வுக்கு தயாராக வேண்டும். கேட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றால், அடுத்தக்கட்டமாக ஐஐடி, என்ஐடி போன்ற உயர்தர கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும். மேலும், பொதுத்துறை நிறுவனங்களில் கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகிறது. எனவே, கல்லூரியில் சேர்ந்த உடனையே கேட் தேர்வுக்கு தயாராக வேண்டும். வாய்ப்பிருந்தால் கோச்சிங் சென்டர் சேர்ந்தும் கேட் தேர்வுக்கு படிக்கலாம்.
​அரியர் அரியர் அரியர்..
கல்லூரி படிப்பு என்றாலே அரியர் வைப்பது சகஜம் தான் என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால், நான்கு ஆண்டு கழித்து அரியர் வைத்திருப்பவர்களிடம் கேட்டால் தான் அது எந்த அளவு கொடுமையானது என்று சொல்வார்கள். எனவே, முடிந்தளவு கிடைக்கும் நேரத்தை, நல்ல கடின உழைப்புடன் படித்து, நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews