ஆசிரியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து - சுப்ரீம் கோர்ட் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 24, 2020

Comments:0

ஆசிரியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து - சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எஸ் . சி . பிரிவைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களை கொண்டே 100 சதவீத பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டும் என்று கடந்த 1986 - ம் ஆண்டில் ஆந்திர பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்தது .
இந்த உத்தரவை மாநில நிர்வாக தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட்டது . இதை எதிர்த்து ' ஆந்திர அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில் , 1998 - ம் ஆண்டு மாநில நிர்வாக தீர்ப்பாயத்தின் தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டது . இதைத்தொடர்ந்து ஆந்திர அரசு 2000 - வது ஆண்டில் மீண்டும் இது தொடர்பாக அரசாணை பிறப்பித்து எஸ் . சி . பிரிவினர் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் பழங்குடியினருக்கு ஆசிரியர் பணியிடங்களுக்கு மீண்டும் 100 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தியது. ஆந்திர அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சி . லீலா பிரசாத்ராவ் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர் . இந்த வழக்கை நீதிபதிகள் அருண் மிஸ்ரா , இந்திரா பானர்ஜி , வினித் சரண் , எம் . ஆர் . ஷா , அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது .
இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது : - ஆந்திர அரசு , இந்த இடஓதுக்கீடு முறையை பரிசீலனை செய்ய வேண்டும் . இந்த பரிசீலனையின்போது உண்மையான பயனாளர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் . கடந்த பல ஆண்டுகளாக உள்ள இடஒதுக்கீடு நடைமுறையில் , போதுமான முன்னேற்பாடுகள் , நடவடிக்கைகள் இந்திரா சாஹானி பரிந்துரையின்படி அமல்படுத்தப்பட வேண்டும் என்ற ராஜீவ் தவானின் கருத்தை இந்த அமர்வு ஏற்றுக்கொள்கிறது . 2000 - வது ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் , 3 / 2000 அரசாணையின்படி , 100 சதவீத அனுமதி என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது . இந்திரா சாஹானி பரிந்துரையில் இது 50 சதவீதம் என்றே இருந்தது . தாழ்த்தப்பட்டோர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒரு பிரிவினருக்கு மட்டும் 100 சதவீத ' இடஒதுக்கீடு வழங்கப்படுவதை ஏற்கமுடியாது .
பழங்குடியின மாணவர்களுக்கு அதே பிரிவைச் சேர்ந்தவர்களே பாடம் கற்பிக்க வேண்டும் என்ற யோசனை அபத்தமானது . மற்ற பிரிவு மக்கள் சொல்லிக்கொடுத்தால் , பழங்குடியினர் மாணவர்களுக்கு புரியாதா ? மாணவர்களின் கல்வித்தரம் அவர்கள் சார்ந்த சமுதாயத்தை வைத்து கணக்கிடப்படுவதை ஏற்றுக்கொள்ள இயலாது . ஆந்திர மாநில அரசின் இந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது . இதுவரை பணியமர்த்தப்பட்டவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை . இனிமேல் பணியமர்த்தப்பட உள்ளவர்கள் விவகாரத்தில் மாநில அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும் . இவ்வாறு இந்த தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews